Home  |  நாட்டு நடப்பு

ஜெ. இறந்தது எத்தனை மணிக்கு? அப்பல்லோ கூறும் பொய்யை போட்டுடைத்த ஓபிஎஸ்..!!

ஜெ. இறந்தது எத்தனை மணிக்கு? அப்பல்லோ கூறும் பொய்யை போட்டுடைத்த ஓபிஎஸ்..!!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்த நேரம், டிசம்பர் 5ம் தேதி, மாலை 4.30 மணியா அல்லது இரவு 11.30 மணியா என்ற சந்தேகத்தை ஓ.பன்னீர்செல்வத்தின் பேச்சு எழுப்பியுள்ளது.

சென்னை எழும்பூரில் இன்று உண்ணாவிரதம் இருந்த ஓ.பன்னீர்செல்வம் நிறைவாக பேசுகையில் இந்த குண்டை தூக்கி போட்டார். ஜெயலலிதா மரணமடைந்ததாக, 2016, டிசம்பர் 5ம்தேதி, மாலை 6.30 மணிக்கு தனக்கு தெரிவிக்கப்பட்டதாக பேச்சின்போது அவர் குறிப்பிட்டார்.

ஜெயலலிதா மாலை 4.30 மணியளவில் மறைந்துவிட்டதாகவும், தனக்கு தகவல் 2 மணி நேரம் தாமதமாகதான் கொடுக்கப்பட்டதாகவும் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

எனவே, அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவின் உயிர் காக்கும் கருவிகள் அகற்றப்படும் முன்பாக தன்னிடம் அதுகுறித்து தெரிவித்து அனுமதி பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இரு தினங்கள் முன்பு அளித்த பேட்டியில், பன்னீர்செல்வத்திடம் இதுகுறித்து அனுமதி பெறப்பட்டதாக கூறியிருந்தார்.

ஆனால் அதை மறுக்கும் பன்னீர்செல்வம், அந்த அறிக்கையை வாபஸ் பெறாவிட்டால் ராதாகிருஷ்ணன் மீது வழக்கு தொடரப்படும் என எச்சரித்தார்.

டிசம்பர் 5ம் தேதி மாலையிலேயே, ஜெயலலிதா உயிரிழந்துவிட்டதாக டிவி சேனல்கள் உட்பட பல ஊடகங்களும் செய்தியை பிரேக் செய்தன. ஆனால் அப்பல்லோ மருத்துவமனை உடனடியாக அதை மறுத்தது.

இரவு 11.30 மணிக்குத்தான் அப்பல்லோ மருத்துவமனை, ஜெயலலிதா இறந்ததாக கூறி, நள்ளிரவில், அதுகுறித்த விவரத்தை வெளியிட்டது.

பன்னீர்செல்வம் கூறுவதை பார்த்தால், ஊடகங்களுக்கு கிடைத்த தகவலை போலவே பன்னீர்செல்வத்திற்கும் ஜெயலலிதா மாலையிலேயே மறைந்த செய்தி கிடைத்துள்ளதாக தெரிகிறது. இதில் எது உண்மை என்பதே இப்போது கேள்விக்குறி.

Apollo lie
  09 Mar 2017
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பெரும் விபத்தில் இருந்து அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினார் சுரேஷ் ரெய்னா
அனிதாவின் தற்கொலையின் பின்னணியில் முக்கிய தமிழ் பெண் பிரபலம்!! வெளியானது இரகசியம்..
மனசெல்லாம் வலிக்குது இந்த வீடியோவைப் பார்க்கும்போது !
தற்கொலையல்ல கொலை: ‘என் கையில் ஒரு பந்து இருக்கிறது, அதை வைத்தே ஆட்சியை கலைப்பேன்’ என்று சொன்ன ஸ்டாலின்
ஓ.பி.எஸ்.சை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போட்டி?அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!
பாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட சாமியாருடன் கோலி என்ன செய்கிறார் தெரியுமா! வைரலாகும் வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு
பேரறிவாளனுக்கு திருமணம்
இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்?
சதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா?