Home  |  நாட்டு நடப்பு

ஓ.பி.எஸ்.சை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போட்டி?அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!

ஓ.பி.எஸ்.சை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போட்டி?அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!

அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி அணிகள் இணைப்பின் போது கட்சியிலும், ஆட்சியிலும் அதிகாரம் வேண்டும் என்ற அடிப்படையில் ஓ.பி.எஸ். தரப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டது.

இதையடுத்து கட்சியின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பதவி ஓ.பி.எஸ்.சுக்கு வழங்கப்பட்டது. அ.தி.மு.க.வை பொறுத்தவரை பொதுச்செயலாளர் பதவி தான் அதிகாரமிக்கது.

தேர்தல் நேரங்களில் வேட்பாளர்களுக்கான கடிதத்தில் கையெழுத்து போடும் அதிகாரமும் பொதுச்செயலாளருக்கு மட்டுமே உண்டு. எனவேதான் ஜெயலலிதா இருந்தவரை கட்சியும், ஆட்சியும் ஒரே தலைமையின் கீழ் இருந்தது.

அதே அடிப்படையில் ஆட்சியில் இருக்கும் எடப்பாடி வசமே கட்சி பொதுச்செயலாளர் பதவியும் வர வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் விரும்புகிறார்கள்.

தற்போதைய சூழலில் ஒருங்கிணைப்பு குழு தலைவர் என்ற முறையில் கையெழுத்து போடும் அதிகாரம், வேட்பாளர்களுக்கு சின்னத்துக்கான அங்கீகார கடிதம் வழங்கும் அதிகாரம் ஓ.பி.எஸ். வசமே உள்ளது.

அணிகள் இணைப்புக்கு பிறகு இரு தரப்பையும் சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, அனைவரையும் அரவணைத்து செல்வதில் எடப்பாடி போராடி கொண்டிருக்கிறார்.

வருகிற 12-ந்தேதி பொதுக்குழுவை கூட்ட முடிவு செய்துள்ளார்கள். இந்த கூட்டத்தில் சசிகலாவை நீக்கி விட்டு புதிய பொதுச்செயலாளரை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளனர்.

கட்சி வதிமுறைப்படி பொதுச்செயலாளரை தேர்வு செய்யும் உரிமை பொதுக்குழு உறுப்பினர்களிடம் இருக்கிறது.

அதிகாரம் மிக்க பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்ற இருவருமே முனைப்பு காட்டுகிறார்கள்.

எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பலம் அதிகமாக இருக்கிறது. அதே போல் அதிகமான மாவட்ட செயலாளர்களும் எடப்பாடிக்கு ஆதரவாகவே இருக்கிறார்கள்.

ஓ.பி.எஸ்.சுக்கு ஆதரவாக 11 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே இருக்கிறார்கள்.

எனவே பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவை திரட்டுவதில் இருவரும் தீவிரமாக இருக்கிறார்கள்.

கட்சியின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் என்ற அடிப்படையில் பொதுச்செயலாளர் பதவிக்கு ஓ.பன்னீர் செல்வம் போட்டியிடுவார். அவரை எதிர்த்து போட்டியிட எடப்பாடி பழனிசாமி முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

கட்சியும், ஆட்சியும் ஒரே தலைமையின் கீழ் இருந்தால்தான் பிரச்சனை இல்லாமல் செயல்பட முடியும் என்பதால் எடப்பாடி பழனிசாமி இந்த முடிவுக்கு வந்திருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

Ops eps
  01 Sep 2017
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பெரும் விபத்தில் இருந்து அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினார் சுரேஷ் ரெய்னா
அனிதாவின் தற்கொலையின் பின்னணியில் முக்கிய தமிழ் பெண் பிரபலம்!! வெளியானது இரகசியம்..
மனசெல்லாம் வலிக்குது இந்த வீடியோவைப் பார்க்கும்போது !
தற்கொலையல்ல கொலை: ‘என் கையில் ஒரு பந்து இருக்கிறது, அதை வைத்தே ஆட்சியை கலைப்பேன்’ என்று சொன்ன ஸ்டாலின்
ஓ.பி.எஸ்.சை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போட்டி?அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!
பாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட சாமியாருடன் கோலி என்ன செய்கிறார் தெரியுமா! வைரலாகும் வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு
பேரறிவாளனுக்கு திருமணம்
இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்?
சதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா?