Home  |  நாட்டு நடப்பு

கைவிரித்தார் எடப்பாடி..!! “ஓபிஎஸ் பக்கம் கை நீளுகிறது”..!

கைவிரித்தார் எடப்பாடி..!! “ஓபிஎஸ் பக்கம் கை நீளுகிறது”..!

ஆளும் கட்சிக்குள் அடித்துக்கொள்ளும் போது எதிர்க்கட்சிகளுக்கு கொண்டாட்டத்தில் பஞ்சம் இல்லை. நேரம் கிடைப்பதற்கு ஏற்றவாறு பொறிகளை கிளப்பி விடுகின்றனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நேற்று வந்த மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில்,

எம்ஜிஆரால் துவங்கப்பட்ட அதிமுக, ஜெயலலிதாவால் வழி நடத்தப்பட்டு, தற்போது நிறைவு பெற்று விட்டதாகவே நான் கருதுகிறேன்.

இன்று அதிமுக 3 அணிகளாக பிளவுபட்டுள்ளது. நெடுவாசல் பிரச்னை ஆட்சியில் உள்ளவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம். அன்று கூடங்குளம் வேண்டாம் என்றுதான் மக்கள் கூறினர்.

கூடங்குளம் இல்லை என்றால் தமிழகத்திற்கு மின்சாரம் இல்லை. இதே போல் நெடுவாசல் குறித்து மக்கள் புரிந்து கொண்டபின் அந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

தமிழக எல்லையில் மீனவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள், இங்குள்ள தமிழ் மீனவர்களுக்கும், இலங்கையில் உள்ள தமிழ் மீனவர்களுக்கும் இடையேயானது.

இது இரு நாட்டிற்கான பிரச்னை அல்ல. மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு எடுக்கப்படும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து தமிழக மக்களிடையே மட்டுமல்ல, அவர்களது கட்சியினருக்கே பல கேள்விகள் உள்ளன.

இப்போதைய முதல்வர் பழனிச்சாமி, அப்போதைய முதல்வர் பன்னீர்செல்வத்திடம் தான் ஜெயலலிதாவின் மரணம் குறித்து கேள்வி கேட்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

இவரிடம் கேட்டால் அவரை கை கட்டுகிறார். தான் இதற்கு பொறுப்பில்லை என்று கூறி கை விரித்து விட்டார். இதனால் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

EPS statement
  07 Mar 2017
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பெரும் விபத்தில் இருந்து அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினார் சுரேஷ் ரெய்னா
அனிதாவின் தற்கொலையின் பின்னணியில் முக்கிய தமிழ் பெண் பிரபலம்!! வெளியானது இரகசியம்..
மனசெல்லாம் வலிக்குது இந்த வீடியோவைப் பார்க்கும்போது !
தற்கொலையல்ல கொலை: ‘என் கையில் ஒரு பந்து இருக்கிறது, அதை வைத்தே ஆட்சியை கலைப்பேன்’ என்று சொன்ன ஸ்டாலின்
ஓ.பி.எஸ்.சை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போட்டி?அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!
பாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட சாமியாருடன் கோலி என்ன செய்கிறார் தெரியுமா! வைரலாகும் வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு
பேரறிவாளனுக்கு திருமணம்
இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்?
சதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா?