Home  |  திரை உலகம்

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் திரைவிமர்சனம் !!

நடிகர்கள் : மிஸ்கின், ஸ்ரீ

 

இயக்கம் : மிஸ்கின்

 

இசை : இளையராஜா

 

ஒளிபதிவு : பாலாஜி வி ரங்கா

 

மருத்துவக் கல்லுரி மாணவரான ஸ்ரீ நள்ளிரவில் வீடு திரும்பும்போது துப்பாக்கியால் சுடப்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருக்கும் மிஷ்கினை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்க முயல்கிறார். ஆனால் அனைவரும் அந்த உயிர் மீது அலட்சியம் காட்ட, தன் வீட்டிலேயே கொண்டு போய் ஆபரேஷன் செய்கிறார். அடுத்தடுத்த நாட்களுக்குள் அங்கிருந்து தப்பிக்கும் மிஷ்கின் ஒரு பயங்கர கிரிமினல் என்பது பிறகுதான் ஸ்ரீக்கு தெரிகிறது. இவரது குடும்பமே போலீஸ் கையில் சிக்க, ‘நீயே அவனை சுட்டுடு’ என்கிற அசைன்ட்மென்ட் தரப்படுகிறது மாணவர் ஸ்ரீக்கு. தன்னை தேடி வரும் மிஷ்கினை ஸ்ரீ சுட்டாரா? போலீஸ் கையில் மிஷ்கின் சிக்கினாரா? என்பதுதான் படத்தின் மீதி கதை.

 

படம் முழுவதும் இரவாக வந்தாலும், இந்த திரைப்படம் தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய வெளிச்சத்தை கொடுத்திருக்கிறது.

 

படத்தில் காதல் காட்சிகள் இல்லை, குத்தாட்ட பாடல் இல்லை, காமெடி நாயகர்கள் இல்லை ஆனால், நல்ல கதை இருக்கிறது.

 

ஒரு மருத்துவக் கல்லுரி பேராசிரியர் தனது தாய் இறந்து போன அவ்வளவு துக்கத்திலும், படித்த படிப்புக்கு தரும் மரியாதை ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது. 

 

ஆக்ஷன் காட்சிகள் அனைத்தும் சூப்பர். மேலும் மிஷ்கின் போலீஸ் அதிகாரிகளை சுட்டுக்கொல்லும் காட்சிகள் நகைப்பையும், நடுக்கத்தையும் ஏற்படுத்துகிறது. போலீஸ் படை சூழ்ந்திருக்க மிஷ்கினும், ஸ்ரீயும் எலக்ட்ரிக் ட்ரெய்னில் தப்பிக்கிற காட்சிகள் பிரமாதம்.

 

போலிஸ் செக்போஸ்டில் இருந்து மிஷ்கின் தப்பிக்கும் காட்சிகளில் மட்டும் சிரிப்பு வாசம் அடிக்கிறது.

 

வில்லனின் கையாளாக வரும் அந்த கருப்பு போலீஸ் அதிகாரியை எங்கு பிடித்தாரோ, மனுஷன் செம லைவ்…

 

படத்தில் வரும் வில்லன் எதார்த்தமாக நடித்திருந்தாலும், ஏதோ மிஸ்ஸிங்...

 

ஜுனியர் ரங்காவின் ஒளிபதிவு பரவாயில்லை. இளையராஜாவின் பின்னணி இசை சொல்லித்தான் தெரியவேண்டுமா....

 

மொத்தத்தில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும்!! நிறைய விறுவிறுப்பு !! கொஞ்சம் சிரிப்பு !!!

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்