Home  |  அறுசுவை

ஓம முறுக்கு (oma murukku)

ஓம முறுக்கு (oma murukku)

தேவையானவை:

 

கடலை மாவு - ஒன்றரை கப்

மைதா மாவு - அரை கப்

ஓம பவுடர் - 4 டேபிள் ஸ்பூன்

மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

எள்ளு - 3 டேபிள்ஸ்பூன்

தேங்காய்ப்பால் - ஒரு கப்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - பொரிக்க

 

செய்முறை:

 

1.முதலில் மைதாமாவை ஆவியில் 15 நிமிடங்கள் அவித்து அரித்து ஆறவிடவும்.

2.அவித்த மைதா மாவுடன், கடலைமாவு, ஓமம், மிளகாய்த்தூள், உப்பு, வெள்ளை எள்ளுவையும் சேர்க்கவும்.

3.ஒரு பாத்திரத்தில் தேங்காய்ப்பாலை ஊற்றி சிறிது நேரம் காய்ச்சவும்.

4.பிறகு காய்ச்சின தேங்காய்ப்பாலை கலந்து வைத்துள்ள மாவில் சிறிது சிறிதாக விட்டு குழைக்கவும். முறுக்கு பிழியும் பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

5.பிசைந்த மாவை முறுக்கு உரலினுள் போட்டு நட்சத்திர அச்சு வழியாக முறுக்குகளாக பிழிந்து கொள்ளவும்.

6.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கொதிக்கவிட்டு, அதில் பிழிந்து வைத்துள்ள முறுக்குகளை போடவும். முறுக்கு சற்று சிவக்க வெந்தவுடன் பரிமாறவும்.

  21 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!