Home  |  அறுசுவை

எண்ணெய் கத்தரிக்காய் (Oil Brinjal)

தேவையானவை :

 

பிஞ்சு கத்தரிக்காய் - கால் கிலோ

துவரம் பருப்பு - ஒரு ஸ்பூன்

உளுத்தம் பருப்பு - ஒரு ஸ்பூன்

பெருங்காயம் - ஒரு சிறு துண்டு

புளி - கோழி குண்டளவு

பொடித்துத்தூவ - 4 மிளகாய் வற்றல்

கடலைப்பருப்பு - ஒரு ஸ்பூன்

எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்

உப்பு - சிறிது

 

செய்முறை :

 

1.கத்தரிக்காயை நான்கு கீறல் போடவும் கம்புகளை நறுக்க கூடாது. நறுக்கிய காயை தண்ணீரில் போட்டு வைக்கவும். 

 

2.ஒரு கடாயில் வாணலியை வைத்து நான்கு டேபில் ஸ்பூன் எண்ணெய்யை விட வேண்டும். அது காய்ந்து வரும் போது நறுக்கிய காயைப் போட வேண்டும். பின் மஞ்சள் தூளை சிறிது போட வேண்டும். நன்றாக கிளரி விட்டு மிதமான தீயில் வைத்து மூட வேண்டும். திரும்ப திரும்ப கிளர வேண்டும். 

 

3.ஐந்து நிமிடம் கழித்து அதில் புளியை நன்றாக கட்டியாக கரைத்து தெளிந்தார்ப்போல் விட வேண்டும். உப்பையும் சேர்த்து நன்றாக கிளரி விட சேர்ந்து வெந்து விடும். பிறகு மேலே தூவுவதற்கு மிளகாய் வற்றல் மற்றும் பருப்பு வகைகளை தனியாக வாணலியில் எண்ணெய் கொஞ்சம் விட்டு நன்றாக சிவக்க வறுக்க வேண்டும். 

 

4.வறுத்த பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம் இவற்றை மிக்ஸியில் பொடி செய்து, பின் வதங்கி வரும் கத்தரிக்காயில் போட்டு நன்றாக சேர்த்து கிளரி இரண்டு நிமிடம் அடுப்பில் இருக்கச்செய்து இறக்க வேண்டும். காய், எண்ணெய், பொடித்துப்போட்ட தூள் எல்லாம் சேர்ந்து வதங்கி இருக்க வேண்டும். சுவையான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு தயார்.

Oil Brinjal

Ingredients for Oil Brinjal:

 

Fresh Brinjal-1/4 Kg

Red Gram-1 Tsp

Black Gram-1 Tsp

Asafoetida-Small Piece

Tamarind-Small Ball size

Dry Chilly-4

Bengal Gram-1 Tsp

Oil-4 Tbsp

Salt-Little

 

Procedure to make Oil Brinjal:

 

1. Peel the brinjals into 4. Then put the vegetables in water.

2. Heat oil in a pan, add chopped vegetables and turmeric powder. Stir well and allow medium flame and cover the pan. Stir frequently.

3. After 5 minutes, add tamarind juice. Then add salt and let to boil. Fry the dry chilies and dhals till it get golden color.

4. Grind fried dhal, dry chilies and asafoetida and then put the powder in to boiled vegetables. Stir well and let 2 minutes to boil and then remove from flame. Tasty oil brinjal is ready to taste.

  14 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!