Home  |  திரை உலகம்

நுகம் ( Nugam )

நுகம் ( Nugam )

Movie Name: Nugam நுகம்
Hero: Jai Bala
Heroine: INIYA
Year: 2013
Movie Director: Jeffy
Movie Producer: Synergy Creation
Music By: D. J. Gopinath

 

இந்தியாவின் வளர்ச்சியை சீர்குலைக்க வளர்ந்த நாடுகள் இந்தியாவுக்குள் தீவிரவாதத்தை ஊடுருவ செய்ய முடிவெடுக்கிறது. அதன்படி, இந்தியாவில் மத்திய அமைச்சர் ஒருவரை கொலை செய்வதற்காக நாயகன் விஜயகுமார் மற்றும் ஜெய்பாலாவை தமிழகத்துக்கு அனுப்பி வைக்கிறது.பணத்துக்காக இந்த கொலை செய்யவரும் இருவரும் சென்னையில் ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்குகின்றனர். இருவரும் மத்திய அமைச்சரை எப்படி கொலை செய்யலாம் என திட்டம் போட்டு வருகின்றனர். இதற்கிடையில், கல்லூரியில் படிக்கும் இனியாவை பார்த்தவுடனேயே அவள்மீது காதல் கொள்கிறார் விஜயகுமார். இனியாவும் இவருடைய காதலை ஏற்றுக் கொள்கிறார்.

இருவரும் காதல் செய்து கொண்டிருக்கும் வேளையில், விஜயகுமார்-ஜெய்பாலா குழுவுக்கு சென்னையில் உள்ள முக்கிய இடங்களை குண்டுவைத்து தகர்க்க வேண்டும் என்று மற்றொரு வேலை வருகிறது. காதலில் விழுந்த விஜயகுமாருக்கு அப்பாவி பொதுமக்களை கொலை செய்ய மனம் ஒப்பவில்லை. அதனால், இந்த செயலை செய்யமுடியாது என ஜெய்பாலாவிடம் கூறுகிறார். ஆனால், ஜெய்பாலா விஜயகுமாரை சமாதானம் செய்கிறார். ஆனால் விஜயகுமார் சமாதானம் அடையவில்லை.இதில் இருவருக்கும் மோதல் ஏற்படுகிறது. எனவே, ஒருவரை ஒருவர் கொலை செய்ய முயற்சி செய்கின்றனர். முடிவில், விஜயகுமார்-ஜெய்பாலா இருவரும் போலீசிடம் மாட்டினார்களா? இனியாவுடன் விஜயகுமார் சேர்ந்தாரா? மக்கள் நல பணியாளராக வரும் கஞ்சா கருப்பு ஒருசில காட்சிகளே வந்தாலும் சிரிக்க வைக்கிறார். சுரேஷ், ப்ரீத்தி, கார்த்தி என்று பலரும் புதுமுகங்களாக நடித்திருக்கிறார்கள். ஒருசிலர் மனதில் ஒட்டினாலும், பலபேருடைய கதாபாத்திரம் மனதை வருடாமலேயே சென்றுவிடுகிறது.

 

  17 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
சர்வைவா பாடலை கேட்ட அஜித் என்ன சொன்னார் தெரியுமா- யோகி.பி தகவல்
அஜித் ரசிகர்களே அடுத்த அதிரடிக்கு தயாரா- ஒரு ஸ்பெஷல் தகவல்
ஜுலை 1ம் தேதிக்காக ஆவலாக காத்துக் கொண்டிருக்கும் விஜய் ரசிகர்கள்- அப்படி என்ன ஸ்பெஷல்
அஜித்தின் விவேகம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஸ்பெஷல் விஷயம்
அடங்கப்பா..! – பிக் பாஸ் நிகழ்ச்சியில் இத்தனை கண்டிஷன்களா?
ஒரு பக்கம் காவி, மறு பக்கம் சூரியன் – நெருக்கடியில் தளபதி நடிகர்…!
'தளபதி' டைட்டிலுக்கு பின்னால் இவ்வளவு பெரிய பழிவாங்கலா? கோலிவுட் ஆச்சரியம்
விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்
விஜய்யின் மெர்சல் படத்திற்கு கிடைத்த புதிய தலைப்பு- மாஸ் டிரண்ட் செய்த ரசிகர்கள்
எனக்கு செட் ஆகாத ஹீரோயின் இவர்தான்...! விஜய் சொன்னது