Home  |  ஆரோக்கியம்

வயது முதிர்வை தள்ளிபோடும் நாவல் பழம் !!

வயது முதிர்வை தள்ளிபோடும் நாவல் பழம் !!


நாவல் மரத்தின் பட்டை, நாவற்பழம்,விதை, இலை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவகுணம் கொண்டது ஆகும். இது சிறுநீர் எரிச்சல், சிறுநீர்க்கட்டு போக்க இம்மூலிகை பயன்படுகிறது. நாவல் பழத்தில் கால்சியம் அதிக அளவில் இருக்கிறது.வைட்டமின் பி1, பி2, பி6 ஒன்றாக உள்ள மிகவும் அரிதான பழம் இது.


நீரிழிவு நோய்க்கு இம்மரத்தின் விதைகள் மருந்தாகப் பயன்படுகின்றன. நாவற்பழங்கள் உடல் சூட்டைக் குறைக்க பயன்படுகின்றன. இப்பழம் மற்றும் இப்பழத்தின் காயவைத்து அரைத்த பொடியும் சர்கரை நோயை குணப்படுத்த வல்லதாகும். நாவற்பழம் உடல் சூட்டினால் ஏற்படும் நீர்சுருக்கினையும் குணமாக்குகிறது. நோய் தடுப்பு காரணியாகவும் நாவல் பழங்கள் பயன்படுகின்றது


இந்த நாவல் பழத்தில் குயுமின் எனும் ஆல்கலாய்டு உள்ளது. இது தோலில் சுருக்கங்கள் விழுவதைத் தடுத்து வயதாவதைத் தள்ளிப்போடும். உடலில் புதிய செல்களைப் புதுப்பிக்கும் திறன்கொண்ட ஆன்டி ஆக்சிடன்ட் ஆப்பிள், கேரட், மாதுளையைவிட நாவல் பழத்தில்தான் அதிகம் உள்ளது. இதனால் தோலில் ஏற்படும் வெண்புள்ளி, அரிப்பு போன்றவற்றைக் குணப்படுத்தும். நாவலை தொடர்ந்து உண்டுவர தோல் பொலிவு கிடைக்கும். இதனால் உங்கள் உடல் முகம் பொலிவு பெரும் !!


இப்பழங்கள் கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல், இரத்தத்துடன் கூடிய பேதி ஆகியவற்றிற்கும் மருந்தாகப் பயன்படுகிறது. இது அல்சர், பெண்களுக்கு வெள்ளைப்படுதல், கர்பப்பை கோளாறுகள், இரத்தப்போக்கு, புற்றுநோய் ஆகியவற்றுக்கும் மருந்தாக பயன்படுகின்றன. இது காச நோய்க்கு கூட மருந்தாக பயன்படுகிறது.

 

  28 Apr 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!