Home  |  திரை உலகம்

ஐஸ்வர்யாவுடன் சண்டை போட்டு பிரியவில்லை � அமலாபால்

ஐதராபாத்: ஐஸ்வர்யாவுடன் சண்டை போட்டு பிரியவில்லை என்று நடிகை அமலாபால் கூறினார்.

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் ’3′ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஒப்பந்தமான அமலா, கால்ஷீட் சொதப்பலால் படத்திலிருந்து நீக்கப்பட்டார்.

இப்போது அவருக்குப் பதில் புதிதாக ஒரு ஹீரோயினை ஒப்பந்தம் செய்ய தீவிர தேடுதல் வேட்டை நடைபெறுகிறது.

தமிழில் அடுத்து ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’ மட்டுமே அமலா பால் கைவசம் உள்ளது. மீதியெல்லாம் தெலுங்குப் படங்கள்தான்.

சமீபத்தில் தனது முதல் தெலுங்கு படத்துக்காக படப்பிடிப்புக்கு சென்று வந்த அமலா, தெலுங்கில் நடிப்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும், அதிக தெலுங்கு படங்களில் நடிப்பதையே விரும்புவதாகவும் கூறினார்..

தெலுங்குப் படங்களுக்காகத்தான் தமிழ்ப் படங்களை புறக்கணிக்கிறீர்களா என்று கேட்டதற்கு, “தெலுங்கில் பெரிய வாய்ப்புகள் வருகின்றன. எனவே அவற்றுக்கு முன்னுரிமை தருகிறேன். ’3′ படத்தில் நடிக்க முடியாமல் போனதற்கு காரணம், கால்ஷீட் இல்லாததுதான். நான் அந்தப்படத்துக்கு அக்டோபரில் தேதி தருவதாகச் சொன்னேன். ஆனால் அவர்கள் செப்டம்பரில் கேட்டார்கள். எனவே அவர்களிடம் நல்ல முறையில் சொல்லிவிட்டே விலகினேன்” என்றார்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்