Home  |  திரை உலகம்

நினைவில் நின்றவள் ( Ninaivil Nindraval )

நினைவில் நின்றவள் ( Ninaivil Nindraval )

Movie Name: Ninaivil Nindraval நினைவில் நின்றவள்
Hero: ASHWIN SEKAR
Heroine: KEERTHI CHAWLA
Year: 2014
Movie Director: G.V.Agastiya Bharathi
Movie Producer: Sree Sabari Movies
Music By: D.IMAAN


நாயகி கீர்த்தி சாவ்லா தன் குடும்பத்துடன் சுற்றுலா செல்கிறார். போகும் வழியில் சுற்றுலா வழிகாட்டியை (கைடு) அழைத்துக் செல்லும்படி தகவல் வருகிறது. அதன்படி அவர்கள் செல்லும் வழியில் தகவல் சொன்ன அங்க அடையாளங்களுடன் அஸ்வின் சேகர் அங்கு இருக்கிறார். இவர்தான் கைடு என்று அவர்கள் அழைக்க, அவரும் அவர்கள் அழைப்புக்கு மறுப்பு தெரிவிக்காமல் சென்று விடுகிறார். சுற்றுலாவில் அவர்களுடன் 3 நாட்கள் தங்கி இருக்கிறார். சுற்றுலாவில் அஸ்வின் பேசுவதும், பழகுவதும், அட்வைஸ் பண்ணுவதையும் பார்த்து கீர்த்தி சாவ்லாவுக்கு அவரை பிடித்து போகிறது.

கடைசி நாளில் சுற்றுலாவில் இருந்து கிளம்பும்போது தன் காதலை அஸ்வினிடம் சொல்ல முயற்சி செய்கிறார். ஆனால் சொல்ல முடியாமல் போகிறது. ஜெயிலரான தன் தந்தையிடம் கீர்த்தி சாவ்லா தன் காதலை சொல்லுகிறார். அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் தன் மகள் காதலை அவர் ஏற்றுக்கொள்கிறார். அதன் பிறகு அஸ்வினை தேடி இருவரும் அலைகிறார்கள். இந்தத் தேடுதலில் அஸ்வின் உண்மையான கைடு இல்லை என்று தெரிந்து கொள்கிறார்கள். இதனால் பெரும் குழப்பத்திற்கு ஆளாகிறார்கள். ஒருநாள் கீர்த்தி சாவ்லாவின் தந்தை பணியாற்றும் ஜெயிலில் கொலை குற்றத்திற்காக அஸ்வினை போலீஸ்காரர்கள் அடித்து இழுத்து வந்து போடுகிறார்கள்.

இதை ஜெயிலர் தன் மகளிடம் சொல்கிறார். இதைக்கேட்டதும் கீர்த்தி சாவ்லா அதிர்ச்சி அடைகிறார். பிறகு அஸ்வினிடம் எப்படி இங்கு வந்தாய்? எப்படி உன் மேல் கொலை குற்றம் வந்தது? அது உண்மையா? என்று கேட்கிறார். அதற்கு அஸ்வின், ‘நான் ஏற்கனவே திருமணம் ஆனவன். நானும் என் மனைவியும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தோம். தற்போது மனைவி உயிரோடு இல்லை எனவும் கூறுகிறார். பிறகு தன் மனைவி எப்படி இறந்தார் பற்றியும், எப்படி ஜெயிலுக்கு வந்தேன் என்றும் கூறுகிறார். இறுதியில் அஸ்வின் ஜெயிலில் இருந்து வந்தாரா? கீர்த்தி சாவ்லாவுடன் இணைந்தாரா? என்பதே மீதிக்கதை. ரிஜிஸ்டராக வரும் எஸ்.வி.சேகர், ஆங்காங்கே காமெடியில் கலக்கி தன் நடிப்பு திறமையால் கதையை நகர்த்தி செல்கிறார். இயக்குனர் அமரர் அகஸ்திய பாரதி கருணைக் கொலையை அடிப்படையாக வைத்து படத்தை எடுத்திருக்கிறார். இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.

  15 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
ரஜினியின் காலா பட தலைப்பின் அர்த்தம் என்ன தெரியுமா?
ரசிகர்களுக்கு ரஜினி எச்சரிக்கை -
மோசமான சாதனைகளில் அஜித்தின் இரண்டு படங்கள்
காலா டைட்டிலில் இதை கவனித்தீர்களா, இதெல்லாம் என்ன குறியீடு தெரியுமா?
விஜய் மகன் புகழை தடுத்த விஜய் – கண்டிக்கத்தக்கது
விவேகம் படத்தில் ஒரு காட்சி வரும்பாருங்க, செம மாஸ்- படத்தை பற்றி காஜல் அகர்வால் கூறிய சுவாரஸ்யம்
கைதாவாரா நடிகர் சூர்யா?: தப்பிக்க வழி இருக்கிறதா?
அஜித் எப்படி வில்லனாக மாறினார் தெரியுமா? இயக்குனரின் ரீவைண்ட்
அஜித்துக்கு பெரிய ஆப்பு வைக்கும் விஷால்; மாஸ்டர் பிளான் ரெடி!
தளபதி 61படத்தின் பாடல் லீக் !!