Home  |  திரை உலகம்

நினைத்தது யாரோ (Ninaithathu Yaaro)

நினைத்தது யாரோ (Ninaithathu Yaaro)

Movie Name: Ninaithathu Yaaro நினைத்தது யாரோ
Hero: Rejith Menon
Heroine: Nimisha Suresh
Year: 2014
Movie Director: VIKRAMAN
Movie Producer: Abhishek Films
Music By: X.Paulraj


காதலில் தோல்வி அடைந்த ஐந்து பேர்களை பற்றியதுதான், இவர்களுக்கு காதல் என்றாலே பிடிக்காது, அதுபோல காதல் செய்பவர்களையும் பிடிக்காது. இவர்கள் ஐவரும் ஒரே விட்டில் தங்கியுள்ளார்கள். இந்நிலையில் காதல் திரைப்படங்களை எடுக்கும் ஒரு முன்னணி இயக்குனரை சந்திக்கும் இவர்கள், காதல் என்பதே பொய்யான ஒன்று, அதை மையமாக வைத்து ஏன் படம் எடுக்கிறீர்கள் என்று ஐந்து பேர்களும் கேட்க, அதற்கு அவர் காதல் என்பது உண்மையானதுதான், சில சமயங்களில் காதலிப்பவர்கள்தான் பொய்யானவர்களாக இருக்கிறார்கள் என்பதை தனது வாழ்க்கை மூலம் எடுத்து சொல்கிறார். பார்க்க ஹேண்ட்சமாக இருக்கும் புதுமுகம் ரெஜித் மேனன் ஓரளவு நடிக்கவும் செய்கிறார்.

நிமிஷா வழக்கமான விக்ரமன் பட நாயகிகளை நம் கண்முன் கொண்டுவரும் எதார்த்தமான அழகும் மற்றும் நடிப்பு. படத்தின் கதை சினிமா பற்றியது என்பதால் தமிழில் உள்ள அனைத்து இயக்குனர்களையும் படத்தில் காண முடிகிறது. சூர்யா கூட ஒரு காட்சியில் வருகிறார். படத்தில் வரும் மற்ற புதுமுக நடிகர் நடிகைகள் இயக்குனர் சொல்வதை சிறப்பாக செய்துள்ளார்கள். இசையமைப்பாளர் எக்ஸ். பால்ராஜ் இசையில் பாடல்கள் சுமாராக உள்ளது.இயக்குனர் விக்ரமன் முற்றிலும் புதுமுக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை வைத்து, தன் பாணியில் ஒரு படம் எடுத்திருக்கிறார்.

கவிஞர் வைரபாரதி உட்பட நிறைய பேர் இந்தப் படத்தில் வாய்ப்பு பெற்றுள்ளார்கள் என்பதால், நிச்சயம் விக்ரமனின் பெருந்தன்மையை நாம் பாராட்டலாம். ‘நினைத்தது யாரோ’ - குடும்பம்.

  16 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்