Home  |  நாட்டு நடப்பு

தென் ஆப்ரிக்காவுக்கு மழையில கண்டம் !!

தென் ஆப்ரிக்காவுக்கு மழையில கண்டம் !!


உலக கோப்பை தொடரில் இன்று நடந்த முதல் அரையிறுதியில் நியூசிலாந்து அணி தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணி கேப்டன் டிவிலியர்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.

உலக கோப்பை அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் நியுசிலாந்து அணி இறுதிபோட்டிக்கு முன்னேறியது.

கடைசி நிமிடம் வரை வெற்றியை நோக்கி ஆடிய தென் ஆப்ரிக்கா அணி கடைசி பந்தில் தோற்று சோகத்துடன் வெளியேறியது.


தென் ஆப்ரிக்க அணிக்கு துவக்கத்திலேயே பவுல்ட் படு சுவாரஸ்யமாக கலக்கினார்.
இவரது வேகத்தில் ஆம்லா 10 ரன்னும், குயின்டன் 14 ரன்னும் எடுத்து அடுத்தடுத்து வெளியேறினர்.
ரூசோவ் 39 ரன்கள் எடுத்தார். சிறப்பாக செயல்பட்ட டுபிளசி அரை சதம் வரை அடித்தார். தன் பங்கிற்கு கேப்டன் டிவிலியர்சும் அரை சதம் அடித்தார்.


தென் ஆப்ரிக்க அணி 38 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 216 ரன்கள் எடுத்திருந்தபோது,
மழையால் போட்டி நிறுத்தப்பட்டது. மழையால் ஆட்டம் சுமார் 2 மணி நேரம் பாதிக்கப்பட்டதால்,
போட்டி 43 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

டுபிளசி 82 ரன்கள் மட்டுமே எடுத்தார். பிறகு அதிரடியாக களமிறங்கிய மில்லர் பட்டயகிளப்பினார்.
மில்லர் 18 பந்தில் 49 ரன்கள் விளாசினார். தென் ஆப்ரிக்க அணி 43 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 281 ரன்கள் எடுத்தது. டிவிலியர்ஸ் 65 ரன்னும் எடுத்து டுமினி 8 ரன்னும் அவுட்டாகாமல் இருந்தனர்.

நியுசிலாந்து அணி டக்–வொர்த் லீவிஸ் முறைப்படி 43 ஓவரில் 298 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
முதலில் நியூசிலாந்து அணிக்கு பிரண்டன் மெக்கலம், கப்டில் ஜோடி சிறப்பான துவக்கம் தந்தது.
மார்னே மார்கல் பந்துவீச்சில் 3 பவுண்டரி விளாசிய மெக்கலம் அரை சதம் அடித்தார். இவர் 59 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார் .

பிறகு வில்லியம்சன் 6 ரன் எடுத்து நிலைக்கவில்லை. கப்டில் 34 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
டுமினி பந்தில் ராஸ் டெய்லர் 30 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.


இதன் பின் கைகோர்த்த கோரி ஆண்டர்சன், எலியாட் ஜோடி சிறப்பாக செயல்பட்டது. இருவரும் அரை சதம் கடந்தனர். இந்த நேரத்தில், ஆண்டர்சன் 58 ரன்களில் அவுட்டானதால் சிறிது பதட்டம் ஏற்பட்டது.

ரான்கியும் 8 ரன்களில் கிளம்ப, நெருக்கடி அதிகரித்தது. இருப்பினும், எலியாட் போராடினார்.
கடைசி 2 பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஆட்டத்தின் திருப்பு முனையாக ஸ்டைன் பந்தை சிக்சருக்கு அனுப்பிய எலியாட் வெற்றியை உறுதி செய்தார்.

இதுவே உலக கோப்பை ஆட்டத்தில் நியுசிலாந்து அணி முதன் முறை இறுதி ஆட்டத்திற்கு செல்கிறதாம்.

  22 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பெரும் விபத்தில் இருந்து அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினார் சுரேஷ் ரெய்னா
அனிதாவின் தற்கொலையின் பின்னணியில் முக்கிய தமிழ் பெண் பிரபலம்!! வெளியானது இரகசியம்..
மனசெல்லாம் வலிக்குது இந்த வீடியோவைப் பார்க்கும்போது !
தற்கொலையல்ல கொலை: ‘என் கையில் ஒரு பந்து இருக்கிறது, அதை வைத்தே ஆட்சியை கலைப்பேன்’ என்று சொன்ன ஸ்டாலின்
ஓ.பி.எஸ்.சை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போட்டி?அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!
பாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட சாமியாருடன் கோலி என்ன செய்கிறார் தெரியுமா! வைரலாகும் வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு
பேரறிவாளனுக்கு திருமணம்
இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்?
சதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா?