Home  |  தொழில் நுட்பம்

இந்தியாவில் புதிய ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார் !!

இந்தியாவில் புதிய ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார் !!

புதிய ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார் இந்தியாவில் புதிய பரிணாமத்தில் மற்றும் குறிப்பிடத்தக்க மாற்றத்துடன் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. கூடுதல் எரிபொருள் சிக்கனம் தரும் வகையில் மட்டுமின்றி வடிவமைப்பிலும், வசதிகளிலும் இந்த காரின் இன்ஜின் மேம்படுத்தப் பட்டிருக்கிறது.

 

இதன் புதிய அழகான முகப்பு கவர்ச்சிகரமாக அருமையாக மாறியுள்ளது. புதிய பானட், புதிய பம்பர், பனி விளக்கு முப்பட்டை க்ரோம் க்ரில் அமைப்பு என வசீகரிக்கிறது. காரின் பின்புறத்தில் 3D வெளிச்சம் தரும் டெயில் லைட்டுகள், பம்பர் மற்றும் புகைப்போக்கி குழாயில் என பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது . இதில் புதிய 15 இன்ச் அலாய் வீல்கள் இருப்பதால் காரின் அழகு வலு சேர்க்கிறது. இன்டிரியர் இருவிதமான வண்ணங்களில் பளிச்சிடுகிறது.

 

எலக்ட்ரிக்கல் கன்ட்ரோல் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் கொண்ட மிர்ரர் கண்ணாடிகள், புதிய எல்இடி லைட்டுகள், டெட் பெடல், கூல்டு கிளவ் பாக்ஸ் என வசதிகள் உள்ளது. பெட்ரோல் மாடல் காரில் டர்போசார்ஜர் துணையுடன் இயங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் 105 பிஎஸ் பவரையும், 175 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. மேலும் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் கொண்டதாக உள்ளது. டர்போசார்ஜர் இல்லாமல் இயங்கும் 1.6 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் அதிக பட்சமாக 105 பிஎஸ் பவரையும், 153 என்எம் டார்க்கையும் தருகிறது.

 

ஃபோக்ஸ் வேகன் புதிய வென்ட்டோ தற்போது 10 மாடல்களிலும், கேன்டி ஒயிட், டீப் புளு ரிவர்ட், நைட் புளு, ரிப்ளெக்ட் சில்வர், டேரா பெய்ஜ், டாபி பிரவுன் என 6 வண்ணங்களிலும் கிடைக்கிறது. ஆடியோ சிஸ்டம், ஏர் பேக்ஸ், சென்ட்ரல் லாக்கிங், சைல்டு சேப்ஃடி கவர், ஆன்ட்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ஏபிஎஸ்), எலக்ட்ரானிக்ஸ் ஸ்டெபிளிட்டி புரோகிராம் (இஎஸ்பி), பவர் ஸ்டீயரிங், பவர் வின்டோஸ், ஏர் கன்டிஷனிங் என அனைத்து தொழில்நுட்ப வசதிகளும் நிறைந்த காராக உள்ளது. இந்த அசத்தல் கார்களை வாங்க, ஃபோக்ஸ்வேகன் டீலர்களில் ரூ.25,000 முன்பணம் செலுத்தி, புதிய வென்ட்டோ மாடல் முன்பதிவு நடக்கிறது.

 

பாதுகாப்பான ஏபிஎஸ் சிஸ்டம் ஹில் ஹோல்டு தொழில் நுட்பம், ஓட்டுநர், பயணிக்கு ஏர்பேக், சிறப்பான முகப்பு தோற்றம் என பல வித்தியாசங்களை தங்கி புது ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார் வந்துள்ளது.

 

  08 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
2017-ல் வாட்ஸ் அப் எப்ப்டி இருக்கும் தெரியுமா?
வாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜை திருத்தலாம்… புதிய வசதி அறிமுகம்….
அதிகளவில் 2000 பிடிபடுவது இப்படியா!GPS , நானோ ஒன்னும் இல்லை ஆனால் இந்த நவீன தொழில்நுட்பம் இதுல இருக்கிறது அதனால் தான் இவ்ளோ கோடிகள் விரைவில் பிடிபடுத்து. பாருங்கள் இது எப்படி வேலை செய்கிறது என்று..
இன்னும் 2 மாதத்தில் சில செல்போன்களில் வாட்ஸ்அப் செயல்படாது!!அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டது வாட்ஸ்ஆப்!
ஒரு எஸ்எம்எஸ் மூலம் ஏர்டெல் 1.2 ஜிபி இலவச டேட்டா ...இதுதான் வழிமுறைகள்!..
‘WhatsApp Gold’ மெசேஜ் உங்களுக்கும் வந்ததா? உஷார்!இதில் இவ்ளோ பெரிய ஆபத்தா!!
உங்கள் Facebook பக்கத்தை யார் யார் எல்லாம் இப்போ பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிய வேண்டுமா!!அந்த ஈசி வழி இதோ!!
தொலைந்து போன மொபைல் மற்றும் லேப்டாப்பை கண்டுபிடிக்க செய்ய வேண்டிய எளிய வழிகள்!
டேட்டா அடிக்கடி தீர்ந்து போகுதா, அப்ப இதை படிங்க.!!இந்த முறைகளை பயன்படுத்தி டேட்டா குறைவதை தடுக்கலாம்!!
மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவது எப்படி!!இவ்ளோ எளிய வழிமுறைகளா!!