Home  |  திரை உலகம்

நேற்று இன்று ( Netru Indru )

நேற்று இன்று ( Netru Indru )

Movie Name: Netru Indru நேற்று இன்று
Hero: VIMAL
Heroine: Richard
Year: 2014
Movie Director: PADMAMAGAN
Movie Producer: 26699 Cinema
Music By: REHAN


வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட பின்பு, வேறொருவரை வேட்டையாட ஒரு அதிரடிப் படையை காட்டுக்குள் அனுப்புகிறது போலீஸ் தலைமை. டேவிட் என்ற போலீஸ் இன்ஸ்பெக்டர், வீரப்பனைத் தேடி காட்டுக்குள் போனவர் 20 போலீஸ்காரர்களின் சாவுக்குக் காரணமாகிவிட்டார். அவரை உயிருடனோ, அல்லது பிணமாகவோ கொண்டு வர வேண்டும் என்பதுதான் இந்த 5 பேர் கொண்ட அதிரடிப் படையினருக்குக் கொடுக்கப்பட்ட அஸைன்மெண்ட்.
இன்றைக்கு தாமினி என்னும் பெண் சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் தனித்து காரில் பயணம் செய்கிறாள். வழியில் கார் மக்கர் செய்துவிட அருகில் ஒர்க் ஷாப் வைத்திருக்கும் விமலிடம் கபினி அணைவரையிலும் தன்னை டிராப் செய்யும்படி சொல்கிறாள். முதலில் மறுக்கும் விமல், பத்தாயிரம் ரூபாய் தருகிறேன் என்று சொன்னவுடன் ஒத்துக் கொண்டு கிளம்புகிறார்.
போலீஸ் கடைசியாக வீரப்பனை சுட்டுக் கொன்றவுடன் மீடியாக்களிடம் என்ன சொன்னார்களோ அதை வைத்துதான் வீரப்பன் கதையை நகர்த்தியிருக்கிறார்கள். வீரப்பனின் வதத்தையும் படமாக்கியிருக்கிறார்கள்.
அதே போலீஸ் சொன்னதுபோலவே வீரப்பன் லட்சணக்கணக்கில் பணம் சம்பாதித்து சில குறிப்பிட்ட இடங்களில் புதைத்து வைத்திருந்தார் என்பதையும் கதையில் பயன்படுத்தியிருக்கிறார்
காட்டுக்குள்ளேயே இருக்கும் அருந்ததி ஒரு விபச்சாரப் பெண்ணாம். “நான் விபச்சாரின்னு எப்படி கண்டு பிடித்தீர்கள்?” என்று அருந்ததி கேட்டதற்கு “கால் விரல்களில் கடைசி விரல்கள் இரண்டும் ஒன்றோடென்று உரசிக் கொண்டிருந்தால் அவர்கள் இந்த வேலையைத்தான் செய்வார்கள் என்று சாமுத்திரிகா லட்சணம் கூறுவதாக” பதில் சொல்கிறார்கள்.

இந்தக் கதையில் இத்தனை காம நெடி என்றால் அடுத்த விமல்-தாமினி கதையிலும் இதேதான்.. விமல் எப்போதுமே வுமனைசராம்.. தண்ணி பார்ட்டியாம்.. வண்டியை எடுக்கும்போதே சரக்கடித்துவிட்டுத்தான் கிளம்புகிறார். தாமினி காரில் உட்காரப் போகும்போது பின் சீட்டில் இருந்து ஒரு பெண் எழுந்து “நேத்து ராத்திரி கம்பெனி கொடுத்ததுக்கு காசு கொடுய்யா..” என்கிறார் விமலிடம். தாமினியை காட்டி, “இந்த கிராக்கியை எங்க பிடிச்ச..?” என்கிறாள் அந்தப் பெண். இத்தனைக்கு பிறகும் தாமினி இவரோடு கபினிக்கு புறப்படுகிறாராம்..!
இதோட விட்டுச்சா சனியன்..? தாமினியின் கார் ஒரு பக்கம் நிக்குது. அங்க போய் அதை ரிப்பேர் பண்ணாமல்.. கபினி நோக்கி கார் செல்கிறதாம்.. வழியில் ஒரு இரவில் ஹோட்டலில் தங்கப் போகிறார்கள்.. கபினி அணைக்கட்டுப் பகுதி எங்கே இருக்கு..? 
கர்நாடகா பகுதியில் இருக்கும் அந்த ஹோட்டலில் கேரளத்து பெண்ணொருவர் வெறும் ஜாக்கெட், பாவாடை அணிந்து ரிசப்ஷனில் உட்கார்ந்து மலையாளம் பேசுகிறாராம்..! என்னவொரு யோசனை பாருங்க இயக்குநருக்கு..?
இப்போ விமல் தாமினியை மடக்கணும்னு அந்த ரிசப்ஷனிஸ்ட்கிட்ட சொல்லியே ரூம் கேக்குறார். தாமினி தான் மட்டுமே அந்த ரூம்ல இருக்க வேண்டும் என்று சொல்ல விமல் மீண்டும் மீண்டும் டிரை செய்கிறார். இயக்குநரிடம்தானே இதனைக் கேட்க வேண்டும்..?

மலையாள சினிமாக்களில் தமிழர்களை ‘பாண்டி’ என்று சொல்லி கேவலப்படுத்துவதாக பலரும் இப்போது புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். சம்பந்தமேயில்லாத கர்நாடக பகுதியில், கேரளத்து பொண்ணு இப்படி அரைகுறை டிரெஸ்ஸில் தண்ணியடித்துவிட்டு. ரூம் போட வந்தவுடன் சல்லாபிக்கும் அளவுக்கு இருக்கிறாள் என்று காட்டுவது கேரளத்து மக்களை கேவலப்படுத்துவது .
நேரடியாக செக்ஸ் படங்கள் எடுப்பது ஒரு வகை.. ஆனால் மறைமுகமாக அதையே மையக் கருவாக வைத்து படம் பார்க்கும் விடலைகளை தியேட்டருக்கு இழுப்பதும், காமத்தை போதிப்பதுமே திரைப்படம் அல்ல.. இதில் திணிக்கப்பட்டிருக்கும் செக்ஸ் காட்சிகளுக்காக இந்தப் படத்துக்கு 4 ஏ சர்டிபிகேட்டுகள் தரப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சட்டப்படி ஒன்றுதான் கொடுக்கப்பட்டாக வேண்டும் என்பதால் அதுதான் கிடைத்திருக்கிறது.
இந்தப் படத்தின் இயக்குநர் பத்மாமகன் ஏற்கெனவே இயக்கிய ‘அம்முவாகிய நான்’ திரைப்படத்திலும் செக்ஸ்தான் படத்தின் அடிப்படை கருவாக இருக்கும். இதுவும் இப்படியே..! “இந்தப் படத்திற்கு ஏ சர்டிபிகேட் கொடுத்துவிட்டார்கள்.. நான் எதையும் கட் செய்ய மறுத்துவிட்டேன்.. பரவாயில்லை கொடுங்க என்று சொல்லி வாங்கிக் கொண்டேன்..” என்றெல்லாம் பெருமையாகவே பேசினார் இயக்குநர் பத்மாமகன்.

 

  13 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்