Home  |  திரை உலகம்

நேரம் (Neram )

நேரம் (Neram )

Movie Name: Neram நேரம்
Hero: Nivin Pauly
Heroine: Nazriya Nazim
Year: 2013
Movie Director: Alphonse Putharen
Movie Producer: Winner Bulls Films
Music By: Rajesh Murugesan


அமெரிக்காவில் சின்னதாக ஒரு பாம் வெடிக்க (குண்டு அல்ல...), இந்தியாவில் "நேரம்" ஹீரோ வெற்றி எனும் நிவினுக்கு கைநிறைய சம்பளத்துடன் கூடிய ஐ.டி. கம்பெனி வேலை பறிபோகிறது. தங்கையின் திருமணத்திற்காக ஊரையே தன் வட்டித் தொழிலால் கட்டி மேய்க்கும் வட்டி ராஜா எனும் சிம்ஹாவிடம் கைநீட்டி கொஞ்சம் பணம் அதிக வட்டிக்கு வாங்குகிறார். கூடவே சின்ன வயது முதல் கூட படித்த வேணி எனும் நாயகி நஸ்ரியா நசிம்மை காதலிக்க தொடங்குகிறார். முதலில் இவர்களது காதலை ஏற்றுக்கொள்ளும் வேணியின் அப்பா தம்பிராமையா, நிவினுக்கு வேலை இல்லை என்று தெரிந்ததும் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

வேணி, வெற்றியுடன் ஓடிப்போய் வாழ வீட்டை விட்டு கிளம்புகிறார். அதேநாளில் வட்டிராஜாவுக்கு ஐம்பதாயிரம் வட்டி பணத்தை செட்டில் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் வெற்றி. வீட்டில் இருந்து வெளியேறிய வேணி, வெற்றிக்காக காத்திருக்கும் போது பட்டபகலில் தனது தங்க செயினை வழிப்பறி கொள்ளையர்களிடம் பறி கொடுக்கிறார். அதே நேரம் வெற்றியும், நண்பரிடம் வட்டிராஜாவுக்கு கொடுக்க வாங்கி வந்த ஐம்பதாயிரம் பணத்தை பிட்பாக்கெட் பேர்வழிகளிடம் பறிகொடுத்துவிட்டு பரிதவித்து போகிறார். இந்நிலையில் ஊரில் இருந்து வெற்றியை தேடி வரும் அவரது தங்கை புருஷன், வரதட்சனை பணத்தின் மீதியை பிஸினஸ் செய்யப்போகிறேன் என வாங்கி போக வருகிறார். வேணியின் அப்பா போலீஸ்க்கு போகிறார்.

காத்திருக்கும் காதலி, தேடும் போலீஸ், டவுரி மீதியை கேட்கும் மச்சான், வட்டி ராஜாவின் கெடு என ஏகப்பட்ட சிக்கலில் தனது கெட்ட நேரத்தால் சிக்கி தவிக்கும் ஹீரோ வெற்றி எனும் நிவினுக்கு நல்ல நேரம் பிறந்ததா?, இழந்ததை எல்லாம் மீட்டாரா? "உன்னை கட்டிக்கப்போறவ ரொம்ப கஷ்டப்படுவா... என எங்கம்மாவும், ப்ரண்ட்ஸூம் சொல்லுவாங்க, கஷ்டப்பட வர்ரியா..." என தன் காதலை நாசுக்காக வெளிப்படுத்தும் வெற்றி எனும் நிவின், நாயகர் மாதிரியே, நாயகி வேணியாக வரும் நஸ்ரியா நசீமும் நடிப்பிலும் சரி, குடும்பபாங்கிலும் சரி செம சூப்பர்ப்! அம்மணி அடுத்தடுத்த படங்களில் கொஞ்சம் கிளாமர் காட்டினார் என்றால் தமிழ் சினிமாவின் நம்பர்-ஒன் இடத்திற்கு போனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை...! வில்லன் வட்டி ராஜாவாக வரும் சிம்ஹா, செம சூப்பர்ப்பா! கழுத்து நிறைய தங்கசங்கிலிகளும், கூட இரண்டு கருப்பு சிவப்பு அடியாட்களுமாக படு பந்தாவாக வட்டி வசூலிக்கும் இவரது பாணியே தனி.

டச்போனை ஆப்ரேட் செய்யத்தெரியாமல் "பத்தாயிரம் ரூபாய்க்கு போன் பட்டன் இல்லை... வேஸ்ட்!" என அவர் அலுத்துக் கொள்ளும் ஒரு காட்சி போதும் தியேட்டரே சிரிப்பில் அதிர்கிறது! வேணியின் அப்பா தம்பிராமையா, எஸ்.ஐ., கட்டகுஞ்சாக வரும் ஜான் விஜய், நாசர், அவரது தம்பி மாணிக்கம் அலைஸ் மாணிக் - அனந்த்நாக், லைட்ஹவுஸ் - ரமேஷ் திலக், காளான் - ஆனந்த், ஜான் - சபரீஷ் வர்மா உள்ளிட்ட ஒவ்வொரு பாத்திரமும் பலே சொல்ல வைக்கும் படைப்புகள்! அதேநேரம் ஊரிலேயே ஒரே ஒரு வட்டிக்காரர் இருப்பது மாதிரியும், அவரிடமே ஹீரோ, ஹீரோவிடம் பிக்பாக்கெட் அடிக்கும் ஆசாமிகள், ஹீரோவுக்கு வேலை தரும் நாசரின் தம்பி என எல்லோரும் அநியாய வட்டிக்கு கடன் வாங்கியிருப்பது, எஸ்.ஐ., ஜான் விஜய்க்கு கட்ட குஞ்சு என வித்தியாசமாக பெயர் சூட்டியிருக்கும் இயக்குனர், நாயகியின் அப்பா தம்பி ராமைய்யாவுக்கு சரவணன் என சாதாரணமாக அவரது வயதுக்கு பொருந்தாத பெயரை சூட்டியிருப்பது உள்ளிட்ட ஒரு சில குறைபாடுகள் இருந்தாலும், அடுத்தடுத்த காட்சிகளிலும் நமது திறந்த வாயை மூட விடாமல் இறுதிவரை அழைத்து செல்வது சிலிர்ப்பு!

  16 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
நாளை மெர்சல் இசை வெளியீடு... விஜய் பேசப் போகும் அரசியல் என்ன?
'விவேகம்' புயலை கண்டு பயந்து ஓடிய படங்கள்
மெர்சல் ரிலீசாகாது..!இப்படி ஒரு பிரச்சனையா!..
தளபதி ரசிகர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி- மெர்சல் ஸ்பெஷல்
'விவேகம்' ட்ரெய்லர்ல இதையெல்லாம் கவனிச்சீங்களா..? #VivegamTrailer
BiggBossல் இருந்து வெளியேறிய ஷக்தியின் முதல் பதிவு- இனி தான் என் ரியல் கேம் ஆரம்பம்
ஓவியாவை பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்ற இதுவே காரணம்..!
மெர்சல் படக்குழுவினர்களுக்கு விஜய் கொடுத்த சூப்பர் சர்ப்ரைஸ்
விவேகம் படத்தை பார்த்த பிறகு அஜித்தின் ரியாக்‌ஷன் இதுதான்
விஜய் படைத்த பிரமாண்ட சாதனை, தமிழகத்தில் தளபதி படம் மட்டுமே நிகழ்த்திய சாதனை