Home  |  திரை உலகம்

நேர் எதிர் ( Ner Ethir )

நேர் எதிர் ( Ner Ethir )

Movie Name: Ner Ethir நேர் எதிர்
Hero: Richard
Heroine: AISHWARYA
Year: 2014
Movie Director: M.Jayapradeep
Movie Producer: V CREATIONS
Music By: Satish Chakravarthy

பார்த்தியும், ரிச்சர்ட்டும் உயிருக்கு உயிரான நண்பர்கள். பார்த்திக்கு வித்யா மீது காதல். கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்கிறார் பார்த்தி. வித்யா ஒரு நட்சத்திர ஒட்டலில் யாரோ ஒருவனுடன் தங்கி இருப்பது தெரியவர, அவளையும், அவனையும் போட்டுத்தள்ள அவளது அறைக்கு எதிர் அறையில் தங்குகிறார் பார்த்தி. இந்த விவரங்களை கூறி நண்பன் ரிச்சர்டை அங்கு வரச்சொல்கிறார். ஆனால் அவர் வருவதற்குள்ளேயே இருவரையும் சுட்டுக் கொன்று விடுகிறார் பார்த்தி. செய்த கொலைகளுக்காக ரிச்சர்ட் கைது செய்யப்படுகிறார். ஒரு ஓட்டல், இரண்டு அறைகள், ஒரு வராண்டா, ஒரு கிச்சன், ஒரு போர்டிகோ இப்படி சில இடங்களில் 5 கேரக்டர்களை மட்டுமே விட்டு பயமுறுத்துகிறார்கள்.

நம்பிக்கை தொலைந்த, துரோகத்தை சுமக்கும், உலகை வெறுக்கும், முகத்தை கொண்டு வந்திருப்பதில் ஆச்சர்ய மூட்டுகிறார். அவரது பேச்சும் பார்வையும் நன்று. துரோகி யார் என்பதை கண்டுபிடிக்கும்போது அதிர்ச்சியும், அவனை தண்டித்து விட்டு கெத்தாக கிளம்பும் காட்சியிலும் கவனம் ஈர்க்கிறார். நண்பன் கேரக்டரை கச்சிதமாகச் செய்திருக்கிறார் ரிச்சர்ட். கிளைமாக்சின் ஒவ்வொரு நிமிடத்தையும் அவர் பதட்டத்துடன் கடத்துவது திகிலூட்டுகிறது. தனது கள்ளக் காதலை பார்த்தி தெரிந்துகொண்டதை அறிந்து தவிக்கும்போது நடிக்கிறார் வித்யா. ஐஸ்வர்யா மேனன் வந்து போகிறார். சீரியசான முகம், சிரிப்பான பேச்சு என கலக்குகிறார், ஓட்டல் ஊழியர் எம்.எஸ்.பாஸ்கர். அவரது தோற்றமும் நடிப்பும் கச்சிதமாக இருக்கிறது. சதீஷ் சக்ரவர்த்தியின் பின்னணி இசை படத்தை விறுவிறுப்பாக்க உதவி இருக்கிறது. ராசாமதியின் ஒளிப்பதிவு கதைக்கு தகுந்த அளவுக்கு கை கொடுத்திருக்கிறது.  16 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்