Home  |  ஆரோக்கியம்

வேப்பிலை மற்றும் வேப்பம்பூவின் மருத்துவ குணங்கள் !!!

தமிழ் மருத்துவ உலகை பொறுத்தவரை, வேப்பமரம் என்பது எல்லாவிதமான நோய்களையும் குணப்படுத்தும் ஒரு அறிய மூலிகை மரம்.  இந்த மரத்தின் சில முக்கிய மருத்துவ குணங்கள் பற்றி இங்கு காண்போம், 

 

1. உடலில் ஏற்படும் தோல் அழற்சி பிரச்சனைகளுக்கு, வேம்பு இலைகளை அரைத்து சாறாக பிழிந்து அரிப்பு உள்ள இடத்தில் தடவினால் அலர்ஜி விரைவிலேயே மறைந்து விடும்.

 

2. உங்களுக்கு சருமநோய் தொற்று இருப்பின் வேப்பிலை குளியல் தொடர்ந்து எடுத்து கொண்டால் சரும பிரச்சனைகள் ஓடியே போய்விடும்.

 

3. மலச்சிக்கல், அஜீரணக்கோளாறு,  வயிறு சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்களுக்கு வேம்பு தேநீர் வைத்து கொடுத்தால் விரைவில் வயிறு பிரச்சனைகள் குணமாகும்.

 

4. உடலில் அளவுக்கு அதிகமாக புளிப்பு தன்மை, மேல் இரைப்பை வலி இருப்பின் அதை சரிசெய்ய வேம்பு  பரிந்துரைக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் இரத்த சுத்திகரிப்பு நச்சு பொருட்களை அழிக்ககூடியதாகவும் இருக்கிறது.

 

5. வாயில் ஏற்படக்கூடிய பற்சிதைவு, மூச்சு பிரச்சனை, புண், ஈறுகளில் ரத்தம், போன்றவற்றை வேம்பு கொண்டு சரி செய்திடலாம். பாலிசாக்கரைடுகளை  அதிகம் கொண்டுள்ள வேம்பு புற்றுநோய் கட்டிகள், லிம்ஃபோசைடிக் லுகேமியாவை குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. 

 

6. நீரிழிவு நோயாளிகள் வேம்பு இலைகளை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். ஏனெனில் வேம்பு ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவை குறைக்க  கசப்பு சுவை கொண்ட அட்ரினலின் மற்றும் குளுக்கோஸை தூண்டுகிறது மேலும் இரத்தத்தில் உள்ள கூடுதல் சர்க்கரையின் அளவை கட்டுபடுத்துகிறது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட வேம்பினை வாரத்தில் ஒரு நாள் வேகவைத்தோ அரைத்தோ எடுத்துகொள்ளலாம். 

 

7. மூட்டுவலி, தசைவலி உள்ளவர்களுக்கு வேப்ப எண்ணெய் தடவினால் மூட்டு வலி எளிதில் குணமாகும். 

 

8. வேப்பம்பூவை ரசம் வைத்து சாப்பிட்டால், கோடை காலங்களில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்கலாம். மேலும் பார்வை சம்பந்தமான வியாதிகள் நிவர்த்தியாவதோடு, ரத்த ஓட்டமும் சீராகும்.

 

9. வேப்பம்பூவை பச்சடி செய்து சாப்பிட்டால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முடியும். 

 

 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!