Home  |  திரை உலகம்

விரைவில் வெளியாக இருக்கும் நீ நான் நிழல் !!

சரத்குமார் தற்போது நீ நான் நிழல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஜான் ராபின்சன் இயக்குகிறார்.


இதில் சரத்குமார் சைபர் கிரைம் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். 


ஜெசின் ஜார்ஜ் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார்.


இன்றைய வாழ்க்கையில் செல்போன்களைப் போன்றே சமூக வலைதளங்களும் மிகவும் தவிர்க்க முடியாத தகவல் பரிமாற்ற சாதனமாகிவிட்டது. இந்த சமூக வலைத்தளங்கள் பல நல்ல விஷயங்களுக்கு பயன்படுவது போலவே, மோசமான விஷயங்களுக்கும் பயன்படுகிறது. 


மலேசியாவில் ஐந்து பேர் அடுத்தடுத்து கொல்லப்படுகிறார்கள். கொலைகளுக்கான காரணம் தெரியாமல் அந்த நாட்டு அரசே குழம்பிப் போகிறது. அப்போதுதான் அந்நாட்டு போலீஸ் அதிகாரிக்கு ஒரு க்ளூ கிடைக்கிறது. அதாவது ஒரு பேஸ்புக் அழைப்புதான் இந்த கொலைகளின் பின்னணியில் இருப்பதை கண்டுபிடிக்கிறார். அடுத்த கொலை நடக்கும் முன் கொலையாளியைக் கண்டுபிடிக்க முனைகிறார்.


அதே நேரம், இங்கு இந்தியாவில் ரோஹித் என்ற நபருக்கு, அதே பேஸ்புக் அழைப்பு வருகிறது. அதன்பேரில் மலேசியா கிளம்புகிறான் ரோஹித். போன இடத்தில் என்ன நடக்கிறது என்பதை சஸ்பென்ஸ் திரில்லருடன் உருவாக்கி வருகிறார்கள்.


இந்தப் படத்தில் சரத்குமாருடன் மனோஜ் கே.ஜெயன், அஜ்மல், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். 


அனேகமாக இந்த படம், இந்த மாத கடைசியில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது. 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்