Home  |  திரை உலகம்

என்னது நஸ்ரியாவுக்கு திருமணமா !!

நையாண்டி பட சர்ச்சை நாயகி நஸ்ரியாவுக்கு விரைவில் திருமணமாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 

மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக மாறி பிறகு நடிகையானவர் நஸ்ரியா. இவர், தமிழில் அறிமுகமான முதல் படம் திருமணம் என்னும் நிக்ஹா என்றாலும் அதன் பின்பு எடுக்கப்பட்ட நேரம் திரைப்படம் முந்திக் கொண்டது. நேரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நஸ்ரியாவுக்கு வாய்ப்புகள் குவிந்தன. தனுஷுடன் 'நய்யாண்டி', ஆர்யாவுடன் 'ராஜா ராணி' ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் நய்யாண்டி படத்தில் நடித்த போது ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவரை புதிய படங்களில் ஒப்பந்தம் செய்வதற்கு இயக்குனர்களும், ஹீரோக்களும் தயங்கினர்.

 

தற்போதைக்கு தமிழை பொறுத்தவரையில் அவருக்கு திருமணம் என்னும் நிக்ஹா, வாய் மூடி பேசவும் ஆகிய இரண்டு படங்கள் மட்டும் கைவசம் உள்ளன. இதில் திருமணம் என்னும் நிக்ஹா படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இவைதவிர அவர், தாய் மொழியான மலையாளத்தில் நான்கு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

 

இந்நிலையில் மலையாள முன்னணி நடிகர் பஹத் பாசிலுக்கும் நடிகை நஸ்ரியா நசீமிற்கும் திருமணம் முடிவாகி இருப்பதாக அறிவித்து இருக்கிறார்கள். பஹத் பாசில், பிரபல மலையாள இயக்குனரின் மகனாவார். தற்போது இவர் அஞ்சலி மேனன் இயக்கி வரும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பஹத்துக்கு ஜோடியாக நடிப்பவர் நஸ்ரியா நசீம். இந்தப் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடிக்கும்போது பஹத் – நஸ்ரியா இருவருக்கிடையே காதல் மலர்ந்துள்ளது. இவர்களது காதல் விவகாரம் சமீபத்தில் இரு வீட்டாருக்கும் தெரிய வந்திருக்கிறது.

 

இந்நிலையில் பஹத்தின் பெற்றோர்களும் நஸ்ரியாவின் பெற்றோர்களும் சந்தித்துப் பேசி இருவருக்கும் திருமணம் செய்துவைக்க முடிவு செய்துள்ளனர். இவர்களது திருமணம் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என்று இயக்குநர் பாசில் தெரிவித்திருக்கிறார்.  

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்