Home  |  திரை உலகம்

வித்யாபாலனை விட நயன்தாராதான் பெஸ்ட் !!

வித்யாபாலனை விட, நயன்தாரா சிறந்த நடிகை எனப் பாராட்டு தெரிவித்துள்ளார் கஹானிப் பட இயக்குனர் சேகர் கம்முலா. 


இந்தியில் சேகர் கம்முலா இயக்கத்தில், வித்யாபாலன் நடித்து பரபரப்பாக பேசப்பட்ட படம் கஹானி. இந்தப் படம் தமிழில் ‘நீ எங்கே என் அன்பே' என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இந்த படத்தில் நயன்தாரா நடித்துள்ளார். இப்படம் தெலுங்கில் அனாமிகா என்ற பெயரில் தயாராகியுள்ளது. இதிலும் நயன் தான் ஹீரோயின். கஹானியில், அமெரிக்காவில் இருந்து வந்து, மும்பையில் காணாமல் போன கணவரை தேடும் கர்ப்பிணி பெண்ணாக வித்யாபாலன் நடித்து இருந்தார்.ஆனால், அனாமிகாவிலும், நீ எங்கே என் அன்பே படத்திலும் நயன்தாரா கர்ப்பிணியாக இல்லாமல், இயல்பான தோற்றத்தில் நடித்திருப்பதாகச் சொல்லப் படுகிறது. நயந்தாராவுக்காக கர்ப்பிணிக் கதாபாத்திரத்தை மாற்றி கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இந்நிலையில், சென்னை வந்த கஹானி டைரக்டர் சேகர் கம்முலாவிடம் இது குறித்துக் கேட்கப்பட்டது. இது குறித்து அவர் கூறியதாவது, 


நயன்தாரா கர்ப்பிணியாக நடிக்க மறுக்கவில்லை. நான்தான் கதாபாத்திரத்தை மாற்றி அமைத்தேன் எனக் கூறினார். மேலும் வித்யாபாலனை விட, நயன்தாரா சிறந்த நடிகைதான். அவர் இந்த படத்தில் நடித்தது, அதிர்ஷ்டம். கர்ப்பிணியாக நடித்தால் சுலபமாக அனுதாபத்தை சம்பாதித்துவிட முடியும். ஆனால், சாதாரண தோற்றத்தில் ஒரு பெண் நடித்து அனுதாபம் சம்பாதிப்பது, சுலபம் அல்ல. அதில், நயன்தாரா வெற்றி பெற்று இருக்கிறார். 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்