Home  |  திரை உலகம்

சண்டை காட்சியில் டூப் போடாமல் நடித்த நயன்தாரா !!

இந்தியில் பெரும் வரவேற்பை பெற்ற 'கஹானி' படம் தமிழில் நீ எங்கே என் அன்பே, தெலுங்கில் அனாமிகா என்ற பெயரிலும் ரீமேக் ஆகிறது. இரண்டு மொழி படங்களிலும், வித்யாபாலன் நடித்த வேடத்தில் நயன்தாரா நடித்தார். கஹானி படத்தில் வித்யாபாலன் கர்ப்பிணி பெண்ணாக நடித்து இருந்தார். ஆனால், அனாமிகாவிலும், நீ எங்கே என் அன்பே  படத்திலும் நயன்தாரா கர்ப்பிணியாக இல்லாமல், இயல்பான தோற்றத்தில் நடித்து இருக்கிறார். இப்படத்தை பிரபல தெலுங்குப் பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கியுள்ளார்.


பட பிடிப்பு குறித்து, இயக்குனர் சேகர் கம்முலா கூறியதாவது, படத்தில் ஒரு முக்கியமான உணர்சிகரமான காட்சி படமாக்கி கொண்டு இருந்தோம். அப்போது தற்செயலாக அவரது கை விரல் நகங்களை கவனித்தேன். மிகவும் நேர்த்தியாக, அழகாக, நீளமாக இருந்தது. ஆனால் கதாபாத்திரத்தின் படி, அந்த காட்சியில் அவரது நகங்கள் அவ்வளவு அழகாக இருக்க வாய்ப்பில்லை என்பதால், இந்த குறையை நயன்தாராவிடம் குறிப்பிட்டேன்.


அவருக்கே உரிய ஒரு புன்னகையோடு பின்னோக்கி நகர, நானும் அடுத்த காட்சிக்கான கவனத்தில் இருந்தேன். சில வினாடிகளில் அவர் திரும்பிய போது பார்த்தால் அவரது நகங்கள் நறுக்க பட்டு இருந்தது. இந்த செயல் அவர் மேல் இருந்த மரியாதையை அதிக படுத்தியது. 


ஏனன்றால் அந்த தருணத்துக்கு முன்னரே நான் அந்த காட்சியில் அவரது நகத்தை மறைத்து படம் பிடிக்க தயாராக இருந்தேன்.


இன்னொரு சம்பவத்தை பற்றியும் குறிப்பிட்டு ஆக வேண்டும். படத்தில் வரும் ஒரு சண்டை காட்சிக்காக அவருக்கு பதிலாக டுப் உபயோகிக்கலாம் என இருந்தேன். ஏனென்றால் அது சற்று அபாயகரமான காட்சி கூட. இதை நான் தான் செய்வேன் என்று அழுத்தமாக, ஆணித்தரமாக சொல்லி விட்டு நடித்தார் என மரியாதையுடன் கூறுகிறார் சேகர் கம்முலா.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்