Home  |  திரை உலகம்

நயன்தாரா, அனுஷ்காவின் சம்பளம் 3 கோடி ரூபாயாம் !!

நடிகைகள் நயன்தாராவும், அனுஷ்காவும் 3 கோடி ரூபாய் சம்பளம் பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 


இந்த இரண்டு நடிகைகளுக்கும் மார்க்கெட் தற்போது உச்சத்தில் உள்ளது. எனவேதான் சம்பளத்தை வரலாறு காணாத அளவு உயர்த்தி உள்ளதாக நடிகைகளின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். 


ஹிந்தியில் ஹிட்டான கஹானி படத்தின் தெலுங்கு ரீமேக்கான அனாமிகா படத்துக்காக நயன்தாராவுக்கு 2 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டது. இந்தப் படம் நீ எங்கே என் அன்பே என்ற பெயரில் தமிழில் வெளியானது. இரண்டு மொழிகளிலும் படம் செம பிளாப்.


தமிழில் அஜீத் ஜோடியாக நடித்த ஆரம்பம், ஆர்யாவுடன் நடித்த ராஜாராணி, உதயநிதியுடன் நடித்த இது கதிர்வேலன் காதல்ஆகிய மூன்று படங்களுமே பெரிய வெற்றியை அடையவில்லை.நயன்தாரா அது பற்றி கவலையேப் படாமல் தன் சம்பளத்தை 3 கோடியாக்கிவிட்டார்.


இவரைப்போல் அனுஷ்காவின் சம்பளமும் விண்ணைத்தொடுமளவுக்கு உயர்ந்துவிட்டது. ருத்ரமாதேவி என்ற சரித்திரப் படத்தில் நடிக்க இரண்டு கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார் அனுஷ்கா. 

அடுத்தடுத்து தேடி வந்த படங்களில் நடிக்க மூன்று கோடி சம்பளம் வாங்கி இருக்கிறாராம்.


இரண்டு நடிகைகளையும் புக் செய்யும் தயாரிப்பாளர்கள் தற்போது 3 கோடியா என வாயை பிளந்து கொண்டு நிற்கிறார்களாம். 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்