Home  |  திரை உலகம்

நவீன சரஸ்வதி சபதம் ( Naveena Saraswathi Sabatham )

நவீன சரஸ்வதி சபதம் ( Naveena Saraswathi Sabatham )

Movie Name: Naveena Saraswathi Sabatham நவீன சரஸ்வதி சபதம்
Hero: JAI
Heroine: Niveda Thomas
Year: 2013
Movie Director: K. Chandru
Movie Producer: AGS FILM ENTERTAINMENT
Music By: Prem Kumar


கைலாயத்தில் ஐபோன், கம்யூட்டர், டெம்பிள் ரன் விளையாடுவது, கைலாயத்தில் இருப்பவர்கள் அவ்வப்போது இங்கிலீஷ் பேசுவது என புதிதாகக் கதையை ஆரம்பிக்கிறார். சிவன் ஒரு அசைன்மெண்ட்டுக்காக நான்கு பேரைக் கொண்டு வருமாறு நாரதரிடம் கேட்கிறார். அப்படி வருபவர்கள்தான், ஜெய், சத்யன், விடிவி கணேஷ், ராஜ்குமார். ஒவ்வொருவருக்கும் தனித்தனி ஃபிளாஷ்பேக் அறிமுகத்துக்குப் பிறகான கதை முன்னகர்கிறது. சித்த வைத்தியரான ஜெய் , நிவேதாவைப் பார்த்தவுடன் காதலிக்கிறார். அதற்கான கஷ்டங்கள் முடிந்து திருமணத்துக்காகக் காத்திருக்கிறார் ஜெய். அடுத்த தேர்தலுக்குத் தயாராகிவருகிறார் சத்யன். ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று உறுதியாக இருக்கும் ராஜ்குமாருக்கு, வெங்கட் பிரபு படத்தில் ஹீரோ வாய்ப்பு கிடைக்க, ஷீட்டிங்குக்காகக் காத்திருக்கிறார். கொடூர பொண்டாட்டியிடம் கஷ்டப்பட்டு ஒரு வாரம் விடுமுறை வாங்கித் தப்பிக்கிறார் விடிவி கணேஷ். இவர்கள் நான்கு பேரும் ஜெய்யின் பேச்சுலர் பார்ட்டி கொண்டாடத் தாய்லாந்து செல்கிறார்கள். தாய்லாந்து சென்றவர்கள், யாருமே இல்லாத ஒரு தீவுக்குள் மாட்டியவர்கள் எப்படித் தப்பித்தார்கள் என்பதுதான் மீதிக் கதை.

முதல் பாதியில் இருந்த அத்தனை சுவாரஸ்யமும் இரண்டாம் பாதியில் இல்லை. ஆறு மாதங்கள் தீவில் இருப்பவர்களுக்குத் தண்ணீர், உணவு போன்ற பிரச்சினைகளை எப்படிக் கையாள்வது என்று யோசித்த இயக்குனர், கதையை மட்டும் எப்படி நகர்த்துவது என்று யோசிக்காமல் விட்டுவிட்டார். நான்கு ஆண்களை மட்டுமே வைத்துக்கொண்டு இரண்டாம் பாதியை நகர்த்த யோசித்த துணிச்சல் அசட்டுத் துணிச்சலாக்கிவிடுகிறது. ஆனாலும் பல இடங்களில் மிகவும் கவனம் செலுத்தியிருக்கிறார் இயக்குனர். அதேபோல இரண்டாம் பாதியில் காமெடி என்ற பெயரில் விடிவி கணேஷ் செய்பவை சில நிமிடங்கள் கடத்துவதற்காகச் செய்வதுபோலவே இருக்கிறது. பிரேமின் மெட்டுக்களில் கானா பாலா பாடும் பாட்டு நன்றாக உள்ளது. ஹீரோயின் நிவேதா தாமஸ் முதல் பாதியில் சில நிமிடங்களும், கிளைமாக்ஸில் சில வினாடிகள் வருகிறார். பாங்காக்கின் வண்ணங்களை ஆனந்த ஜீவாவின் காமிரா அழகாகப் படம்பிடித்துள்ளது. கைலாயக் காட்சிகள் காட்சிப்படுத்தப்பட்ட விதம் சிறப்பாக உள்ளன. கலகலப்பும், பொறுமையையும் சோதிக்கிறது கடவுள்.

  18 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் அடுத்தப்படமும் இதே ஸ்டைல் தான்
கமலின் கருவிழி பிதுங்குகிறதா..?? நிகழ்ச்சி தொடங்கி அடுத்த நாளே வெளியானது, விஜய் டிவி “பிக் பாஸ்’ ஷோவ
இது எல்லாமே விஜய் ரசிகர்களால் தான்- மனம் நெகிழும் பிரபலம்
'தல 58' படத்தின் இயக்குனர் இவர்தான் உறுதியான தகவல்!
விஜய்-முருகதாஸ் படத்திற்கு இவர் தான் இசையமைப்பாளரா?
சர்வைவா பாடலை கேட்ட அஜித் என்ன சொன்னார் தெரியுமா- யோகி.பி தகவல்
அஜித் ரசிகர்களே அடுத்த அதிரடிக்கு தயாரா- ஒரு ஸ்பெஷல் தகவல்
ஜுலை 1ம் தேதிக்காக ஆவலாக காத்துக் கொண்டிருக்கும் விஜய் ரசிகர்கள்- அப்படி என்ன ஸ்பெஷல்
அஜித்தின் விவேகம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஸ்பெஷல் விஷயம்
அடங்கப்பா..! – பிக் பாஸ் நிகழ்ச்சியில் இத்தனை கண்டிஷன்களா?