Home  |  ஆன்மிகம்

அருள்மிகு தெட்சிணாமூர்த்திசுவாமி திருக்கோயில், திருவொற்றியூர், திருவள்ளூர்

Name: அருள்மிகு தெட்சிணாமூர்த்திசுவாமி திருக்கோயில்
Temple Type: நவக்கிரக கோயில்
Mulavar: தெட்சிணாமூர்த்தி
Year: 500 வருடங்களுக்கு முன்
Address: அருள்மிகு தெட்சிணாமூர்த்திசுவாமி திருக்கோயில், திருவொற்றியூர், சென்னை 600 019 திருவள்ளூர் மாவட்டம்
Town: திருவொற்றியூர்
District: திருவள்ளூர் [ Thiruvallur ]-600 019.
State: தமிழ்நாடு [ Tamil nadu ]
Country: இந்தியா [ India ]

வடக்கு நோக்கிய தெட்சிணாமூர்த்தி. தெட்சிணாமூர்த்திக்கென அமைந்த தனிக்கோயில் இது. வலது கையில் அக்னி, இடக்கையில் நாகம் வைத்து, காலுக்கு கீழே முயலகனை மிதித்தபடி சுவாமி காட்சி தருகிறார். பொதுவாக தெட்சிணாமூர்த்தியின் கீழே சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் என நான்கு சீடர்கள் மட்டுமே இருப்பர். ஆனால் இங்கு மூலவரின் பீடத்தில் 18 மகரிஷிகள் சீடர்களாக இருக்கின்றனர். இத்தகைய அமைப்பைக் காண்பது அபூர்வம்.

உற்சவர் தெட்சிணாமூர்த்தியின் பீடத்தில் யானை வணங்கியபடி அமைக்கப்பட்டிருக்கிறது. பல்லாண்டுகளுக்கு முன்பு சித்தர் ஒருவர், இங்கு வேதபாடசாலை அமைத்து, மாணவர்களுக்கு வேதம் கற்பித்து வந்தார். அப்போது வேதத்தின் வடிவமாகத் திகழும் தெட்சிணாமூர்த்திக்கு, இங்கு சிலை வடித்து கோயில் எழுப்பினார். தென் திசை கடவுளான தெட்சிணாமூர்த்தி, தெற்கு நோக்கித்தான் இருப்பார். ஆனால் இங்கு இவர் வடக்கு நோக்கியிருப்பது, வேறெங்கும் காண முடியாத அமைப்பு. எனவே தலம், "வடகுருதலம்' எனப்படுகிறது. 



  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
யார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....!
ஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் !!
ஓம் நமசிவாய - சிவ துதி !!
அருணகிரிநாதரின் சிவ பாடல் !!
லிங்கம் சிவ லிங்கம் !!
திருமுருகன் பூண்டி கோவில் கும்பாபிஷேகம் !!
சிவ சரணம் துதி பாடல் !!
தென்கயிலாயம் வெள்ளியங்கிரியான்டவர் !!
திருநள்ளார் தெர்பாராண்யேஸ்வரர் கோயில் !!
திருவண்ணாமலை முக்தி தலம் !!