Home  |  அறுசுவை

நவதானிய அடை (navadhanya adai)

நவதானிய அடை (navadhanya adai)

தேவையானவை:

 

பருப்புவகைகள் எல்லாம் சேர்ந்து- அரைகப்

ப்ரவுன் ரைஸ்-1/2கப்

வரமிளகாய்- 7

சீரகம்-1டீஸ்பூன்

பெருங்காயம்- 1/4டீஸ்பூன்

உப்பு

வெங்காயம்-1

பச்சைமிளகாய்-1

கறிவேப்பிலை-கொத்துமல்லி சிறிது

தேங்காய்ப்பல்லு-2 டேபிள்ஸ்பூன்

கடுகு-1/2டீஸ்பூன்

க.பருப்பு, உ.பருப்பு- தலா ஒரு டீஸ்பூன்

எண்ணெய்-சிறிது 

 

செய்முறை :

 

1.முதலில் அரிசி,பருப்புவகைகளை களைந்து, மிளகாயுடன் 4 மணி நேரம் ஊறவைக்கவும்.

2.பிறகு ஊறியதும், பெருங்காயத்தூள் சேர்த்து, கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு, கொறகொறப்பாக அரைக்கவும். 

3.கடைசியில் சீரகம் சேர்த்து 2 சுற்று மிக்ஸியை ஓடவிட்டு மாவை எடுத்துவைக்கவும்.

4.ஒரு கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு,க.பருப்பு,உ.பருப்பு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம்-ப.மிளகாய்-கறிவேப்பிலை,தேங்காய்ப்பல்லு,கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கவும். 

5.அடை சுடும்பொழுது வதக்கிய வெங்காய கலவை,தேவையான உப்பு சேர்த்து அடைமாவில் கலந்து வைக்கவும்.

6.தோசைக்கல்லை காயவைத்து அடைகளாக ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டு, ஒருபுறம் வெந்ததும் திருப்பிப்போட்டு பொன்னிறமானதும் எடுத்து பரிமாறவும்.

 

 

 

 

 

 

 

 

 

 

  19 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!