Home  |  திரை உலகம்

தயாரிப்பாளரின் நஷ்டத்தை நினைத்து கஷ்டத்திலும் நடிக்க வந்த நாசர் !!

கடந்த வாரம் நாசரின் மகன் ஃபைசல் விபத்தில் சிக்கியபோது, உத்தமவில்லன் படபிடிப்பில் இருந்தார் நாசர். 


விஷயம் தெரிந்த உடன் பதறியடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தார். 


விஷயத்தைக் கேள்விப்பட்ட கமல் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு நாசரின் மகன் ஃபைசல் அனுமதிக்கப்பட்டிருந்த தனியார் மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு டாக்டர்களிடம் ஆலோசனை செய்து, நாசருக்கு ஆறுதல் சொல்லி தேற்றியதோடு, அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஃபைசலின் உடல்நிலை பற்றி விசாரித்தவண்ணம் இருந்தார். இதை எல்லாம் தாண்டி நாசர் செய்த விஷயம்தான் திரையுலகில் அவரை அண்ணாந்து பார்க்க வைத்திருக்கிறது.


உத்தமவில்லன் படத்தில் நாசர் சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்குவதற்காக செட் போடப்பட்டிருந்தது. 


மகனுக்கு ஏற்பட்ட விபத்தினால் துயரத்தில் இருக்கும் நாசரால் இப்போதைக்கு நடிக்க முடியாது என்பதால் செட்டை பிரிக்கச் சொல்லிவிட்டாராம் கமல். அதனால் தயாரிப்பாளருக்கு பல லட்சம் நஷ்டமாகும். 


இதைக் கேள்விப்பட்ட நாசர், செட்டை பிரிக்க வேண்டாம்.. ஹாஸ்பிடலிலேயே இருப்பது எனக்கும் கஷ்டமாக இருக்கிறது.


நான் படப்பிடிப்புக்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டு, உத்தமவில்லன் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்