Home  |  ஆன்மிகம்

நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரர் !!

நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரர் !!

நமது அண்டை மாநிலமான கர்நாடக மாநிலம் மைசூர் அருகே உள்ள நஞ்சன்கூடு என்ற ஊரில் கோவில் கொண்டுள்ள எல்லாம் வல்ல சிவ பெருமான் நஞ்சுண்டேஸ்வரர் எனும் பெயரில் அனைவருக்கும் அருள் பாலிக்கிறார்.


பொதுவாக சிவன் கோவில்களில் ஐப்பசி மாதம் வரும் பௌர்ணமி அன்று தான் ,சிவ லிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்வார்கள் ஆனால் இங்கு தினசரி பூஜையின் போது லிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.


விஷத்தின் வடிவமான கேசியன் என்ற அசுரனை அழித்த காரணத்தால் சிவபெருமான் இங்கு உக்கிரமாக இருப்பதாகவும்,அந்த உக்கிரத்தை குறைக்கும் விதமாக இந்த அபிஷேகம் செய்யபடுவதாகவும் சொல்கிறார்கள் .

மேலும் இங்குள்ள இறைவனுக்கு சுக்கு, வெண்ணெய் மற்றும் சர்க்கரை மூன்ரையும் கலந்த சுகண்டித சர்க்கரை என்னும் மருந்தையும் நைவேத்தியம் செய்கிறார்கள் .


சகல நோய்களையும் குணமாக்குபவராக நஞ்சுண்டேஸ்வரர் அருளுவதால் இவருக்கு 'ராஜ வைத்தியர் என்ற சிறப்பு பெயரும் உண்டு.

அம்பாள் பார்வதி இங்கு சிவனுக்கு இடப்புறம் தாட்சாயணியாக தனி சன்னதியில் அருள்பாலிக்கிறாள். இந்த சன்னதியில் வீரபத்திரரும் எழுந்தருளியிருப்பது விசேஷம் .


ஒருமுறை தட்சன் ,சிவபெருமானை அவமதித்து யாகம் நடத்தினான் .அப்போது ,தாட்சாயணி (பார்வதி )யாகத்தை நிறுத்த சென்றாள். அங்கு தட்சன் அவளை அவமதிக்கவே யாகத்தை நிறுத்துவதற்காக யாக குண்டத்தில் வீழ்ந்தாள். அந்நேரத்தில் சிவபெருமான் தனது உக்கிரத்தில் இருந்து வீரபத்திரரை உருவாக்கி யாகத்தை அழிக்க அனுப்பினார்.


அவர் தட்சன் மேற்கொண்ட யாகத்தை அழித்ததோடு அவனது தலையையும் கொய்தார் மேலும் உக்கிரம் குறையாத வீரபத்திரர் யாகத்தில் விழுந்த தாட்சாயணியை தோளில் தூக்கி கொண்டு நடனமாடினார் அந்த வேளையில் தட்சன் மனைவி பிரசுத்தாதேவி சிவ பெருமானிடம் வந்து முறையிட்டாள்.


தவறு செய்த கணவரையும் ,மகள் தாட்சாயணியையும் உயிர்ப்பித்து அருளும் படி வேண்டினாள். அவளது வேண்டுகோளை ஏற்ற சிவன் தட்சணையும், தாட்சாயணியையும் உயிர்ப்பித்தார்.


இந்த நிகழ்வின் அடிப்படையிலே இந்த தலத்தில் வீரபத்திரர் மற்றும் தாட்சாயணியுடன் எல்லாம் வல்ல இறைவன் இங்கு அருள் பாலிக்கிறார். முன்வினை பாவம், தெரியாமல் செய்த பாவம் ஆகியவை இத்தலத்து இறைவனை வழிபடுவதன் மூலம் நிவர்த்தியாகிறது என்கிறார்கள் .

 

  19 May 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
யார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....!
ஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் !!
ஓம் நமசிவாய - சிவ துதி !!
அருணகிரிநாதரின் சிவ பாடல் !!
லிங்கம் சிவ லிங்கம் !!
திருமுருகன் பூண்டி கோவில் கும்பாபிஷேகம் !!
சிவ சரணம் துதி பாடல் !!
தென்கயிலாயம் வெள்ளியங்கிரியான்டவர் !!
திருநள்ளார் தெர்பாராண்யேஸ்வரர் கோயில் !!
திருவண்ணாமலை முக்தி தலம் !!