Home  |  திரை உலகம்

நளனும் நந்தினியும் ( Nalanum Nandhiniyum )

நளனும் நந்தினியும் ( Nalanum Nandhiniyum )

Movie Name: Nalanum Nandhiniyumநளனும் நந்தினியும்
Hero: Michael Thangadurai
Heroine: NANDHITA
Year: 2014
Movie Director: Venkatesan
Movie Producer: Libra Productions
Music By: Ashwath Naganathan


நளனும் நந்தினியும் பெற்றோர்களை எதிர்த்துக் கொண்டு காதல் திருமணம் செய்து கொள்ளும் இருவரும், படம் நெடுகிலும் சுமார் உறவுக்காரர்கள் திரிகிறார்கள். யார் யாருக்கு உறவு? அதுவும் என்ன மாதிரியான உறவு? அழகம்பெருமாளுக்கும், ஜெ.பிக்கும் அடிக்கடி முட்டிக் கொள்கிறது. இருவரும் எந்நேரமும் பளிச்சென நடக்கிறார்கள். கிராஸ் பண்ணும்போது முறைத்துக் கொள்கிறார்கள். ஏன்? அழகம் பெருமாள் எலக்ஷனில் நிற்க, அவருக்கு ஓட்டுப் போடாமல் தோற்கடிக்கிறாராம் ஜெ.பி. இந்த முறைப்புக்கு நடுவில் தங்கள் வீட்டு வாரிசுகள் காதலிக்கிறார்கள் என்பதே தெரியாமல் போகிறது அவர்களுக்கு. ‘நமக்கு அவங்க கல்யாணமே பண்ணி வைக்க மாட்டாங்க. தாலி கட்டிகிட்டு போய் முன்னாடி நிப்போம்’ என்று முடிவெடுக்கிற ஜோடிகள், அப்படியே போய் நிற்கிறது.சென்னைக்கு பஸ் ஏறும் ஜோடி, சென்னைக்கு வந்து என்னவானது?

முதல் பாதிக்கும் ரெண்டாவது பாதிக்கும் அப்படியே பெருத்த வித்தியாசம். மிக மிக அமைதியாக கவித்துவமாக நகர்கிறது படம். வீட்டை பகைத்துக் கொண்ட ஒரு காதல் ஜோடி என்னவெல்லாம் இம்சைகளை அனுபவிக்கும்? கண்களில் நீர் புரள வைக்கிறார் இயக்குனர். ஓடி வரும் இளசுகளை மிரள வைக்கும் காட்சிகள் அவை. அதிலும், கர்ப்பிணி நந்திதா, தனியாக மருத்துவமனைக்கு சென்று அட்மிட் ஆகிற கொடுமையெல்லாம் தனிமையால் தவித்தவர்களை மீண்டும் ஒரு முறை ஷேக் செய்யும்.

ஹீரோ மைக்கேலுக்கு இது முதல் படம். எக்ஸ்பிரஷன்கள் மக்கர் பண்ணினாலும், கர்ப்பிணி மனைவியை தனியாக மருத்துவமனைக்கு அனுப்புகிறோமே என்கிற ஆற்றாமையை அழகாக புரிய வைக்கிறார். அதிலும் மனைவி சம்பாத்யத்தில் அவர் பண்ணும் ரவுசும், சின்ன பிள்ளைகளோடு கோலி விளையாடுவதும், அவருக்குள்ளும் ஒரு லட்சியம் இருக்கிறதா என்ற எண்ணத்தையே ஏற்படுத்துகிறது.அநாயசமாக நடித்திருக்கிறார். விட்டேத்தி கணவனை விட்டுக் கொடுக்காமல் காப்பாற்றுவதும், பின்பு அவனை மோட்டிவேட் செய்து பெரிய டைரக்டராக உயர்த்துவதுமாக பொண்ணு சூப்பர். ஜெ.பி வேட்டிக்கேற்ற வெள்ளை மனசுக்காரராக இருக்கிறார்.

ஆரம்பத்தில் தாம் தும் என குதித்து அப்புறம் புரிந்து கொண்டு இணைகிற அழகம்பெருமாளும் கவர்கிறார்கள். ரேணுகாவை ஏன் ஜெபி யின் தங்கையாக்கினார்களோ, எந்நேரமும் மனைவி மாதிரி அண்ணனை ஒட்டிக் கொண்டே நடக்கிறார். குழந்தையின் தட்டிலிருந்து கோழி முட்டையை பிடுங்கி தின்னும் அப்பனாக நடித்திருக்கும் அந்த இளைஞரின் கேரக்டரை நினைத்து நினைத்து சிரிக்கலாம். இசை அஸ்வத் என்ற புதியவர். பின்னணி இசையும் சரி, பாடல்களுக்கான ட்யூன்களும் சரி, சட்டென ஒட்டிக் கொள்கிறது. குறிப்பாக ‘வாடகைக்கு கூடு ஒன்று பாடல்…’ நம்பிக்கையான வரவாக இருக்கிறார். பெரிய கம்பெனிகள் வாய்ப்பளித்தால் பிரகாசிப்பார்.

  14 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்