Home  |  திரை உலகம்

மத உணர்வை புண்படுத்தும் காட்சி : நய்யாண்டி திரைப்படத்தின் மீது வழக்கு !!

நய்யாண்டி திரைப்படத்தில் இந்து மதத்தை இழிவு படுத்தும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பாஜக நிர்வாகி ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

 

சென்னை, மாத்தூரை சேர்ந்தவர் முத்து ஆர்.வெங்கட்ராமன். திருவள்ளூர் மாவட்ட பா.ஜ.க. நிர்வாகியான இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்துள்ள புகாரில், "தனுஷ் நடித்து வெளியாகியுள்ள நய்யாண்டி திரைப்படம் தொலைக்காட்சி சேனல்களில் விளம்பரம் செய்யப்படுகிறது. அந்த விளம்பர காட்சியில், தனுஷ் மற்றும் இரண்டு நடிகர்கள் ஜாதகம் போல் ஒன்றை வைத்துக்கொண்டு, எனக்கு இந்த பெண் வேண்டாம் என்று பேசும் வசனம் வருகிறது. அந்த ஜாதகம் போன்ற அட்டையில் இந்து மதத்தினர் பெரிதும் நம்பிக்கையுடன் வழிப்படும் பெண் தெய்வம் லட்சுமியின் படம் உள்ளது. நவராத்திரி விழா கொண்டாடும் நேரத்தில், இப்படி இந்து மதத்தையும், இந்து கடவுளையும் அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த காட்சியை எடுத்துள்ளார்கள். எனவே, அந்த சர்ச்சைக்குரிய காட்சியை 'நய்யாண்டி' படத்தில் இருந்து நீக்க வேண்டும். இந்த படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர்கள் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்," என குறிப்பிட்டுள்ளார், ஆர்.வெங்கட்ராமன்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்