Home  |  திரை உலகம்

நையாண்டி ( Naiyaandi )

நையாண்டி ( Naiyaandi )

Movie Name: Naiyaandi நையாண்டி
Hero: DHANUSH
Heroine: Nazriya Nazim
Year: 2013
Movie Director: A.SARGUNAM
Movie Producer: FIVE STAR FILMS
Music By: M. Ghibran


கும்பகோணத்தில் குத்துவிளக்கு கடை வைத்திருக்கும் சின்ன வாண்டு கதாபாத்திரத்தில் தனுஷ், பல் டாக்டர்க்கு படிக்கும் வனரோஜா கதாபாத்திரமாக நஸ்ரியா, இவர்களின் காதல் மற்றும் இவர்களின் குடும்பத்தில் நடக்கும் விசயங்கள்தான் மொத்தப்படமும். சூரி,சத்யன், இமான் அண்ணாச்சி என்று பல காமெடியன்கள், அவர்கள் மட்டுமல்லாமல் ஹீரோ ஹீரோயின் கேரக்டர் ஆர்டிஸ்ட் என எல்லோரும் காமெடி செய்திருக்கிறார்கள். தொடர்ந்து காமெடி, கலாய்த்தல் என்று போய்க்கொண்டிருக்கும் படம் ஸ்ரீமன் என்ரிக்குப்பிறகு வேகம் பிடிக்கிறது. அவரின் கதாபாத்திரம் என்ன, கதை எப்படி மாறுகிறது என்றெல்லாம் சொன்னால் இது நல்ல விமர்சனமாக இருக்காது.

நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். தனுஷ் தன்னுடைய ரோலை மிகச்சிறப்பாக செய்திருக்கிறார். சும்மாவே அவர் அடுத்த வீட்டு பையன் போல் இருப்பார், அதற்குத்தகுந்தாற்போல் ரோலும் அமைந்து விட்டதால் கலக்கி இருக்கிறார். நஸ்ரியா ரொம்பவும் க்யூட்டாக இருக்கிறார். ஆனால் கடந்த சில நாட்களாக நடந்த விசயங்கள், அவருக்கு நெகட்டிவ் பப்ளிசிட்டியாகவே அமைந்து விட்டது என்பது அவரின் அறிமுக காட்சியில் தியேட்டரில் எழுந்த சில முனுமுனுப்புகளே சாட்சி, விரைவில் அவற்றிலிருந்தெல்லாம் மீண்டு வருவார் என்று நம்புவோம். இயக்குனர் சற்குணம் தன்னுடைய பாணியில் நல்ல காமெடி படத்தை தந்திருக்கிறார். ஆனால் கட் செய்தால் ஃபரின் லொக்கேசன், பாடல்கள் வரும் சிட்சுவேசன்! என்ன இதெல்லாம் வாகைசூடவா படத்தின் சற்குணமா?

  17 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விவேகம் படத்தை பார்த்த பிறகு அஜித்தின் ரியாக்‌ஷன் இதுதான்
விஜய் படைத்த பிரமாண்ட சாதனை, தமிழகத்தில் தளபதி படம் மட்டுமே நிகழ்த்திய சாதனை
BiggBossல் ஜுலி தான் ஜெயிப்பார்- பிரபல நடிகரின் டுவிட்
விவேகம் இரண்டாவது பாடல் பற்றி அனிருத் அதிரடி தகவல்
பிக் பாஸ் போட்டியாளர்களுடன் இப்படி ஒரு ஒப்பந்தமா?வெளிவந்த அதிர்ச்சி தகவல்
மெர்சல் படத்தில் விஜய்யின் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் இதுதானா- உறுதியான தகவல்
மெர்சல் படத்தில் விஜய்யின் ஒரு கேரக்டர் உறுதியானது- வெளியான புகைப்படம்
பொய் சொன்ன ஜூலியை மாட்டி விட்ட ஆர்த்தி...
BiggBoss நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு வார சம்பளம் மட்டும் இவ்வளவா?
விஜயின் தெறி படத்தால் நடந்த சுவாரசியமான சம்பவம்! எத்தனை பேருக்கு தெரியும்