Home  |  திரை உலகம்

கோச்சடையான் ரிலீஸ் தேதி இன்னும் முடிவாகவில்லையாம் !! படத்தில் நாகேஷூம் நடித்துள்ளாராம் !!

கோச்சடையான் படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் முடிவாகவில்லை என அந்த படத்தின் இயக்குனரும், சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகளுமான செளந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்தார்.


பிரபல ஸ்மார்ட் போன்' தயாரிப்பு நிறுவனமான கார்பான், கோச்சடையான்' படத்தில் ரஜினிகாந்த் நேரடியாக தோன்றும் காட்சிகளோடு செல்போன் மற்றும் ஸ்மார்ட் உபகரணங்களைத் தயாரித்துள்ளது. இந்த செல்போனை வரும் மார்ச் 9-ஆம் தேதி நடக்கவுள்ள 'கோச்சடையான்' பட ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் வெளியிடுகிறார். இது குறித்து கார்பன் செல்போன் நிறுவனத்தின் சார்பில் சென்னையில் நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் படத்தின் இயக்குநர் செளந்தர்யா ரஜினிகாந்த் கலந்து கொண்டு கூறியதாவது, 


கோச்சடையான்' படம் குறித்து ரசிகர்களிடையே நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. நவீன தொழில்நுட்பத்தில் இந்தியாவில் முதல்முறையாக உருவாகியுள்ள கோச்சடையான்' திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும். "கோச்சடையான்' எந்தப் படம் மாதிரி இருக்கும் என கேட்கிறார்கள். சில பேர் அவதார் பட பாணியில் இருக்கும் என்கிறார்கள். ஆனால் நிச்சயம் வேறுபட்ட வடிவத்தில் படம் உருவாகியுள்ளது. எந்தப் படத்தோடும் "கோச்சடையான்' படத்தை இணைத்துப் பேச முடியாது.


பட வெளியீடு தாமதாக நிறைய காரணங்கள் இருக்கின்றன. கோச்சடையான் படம் இவ்வளவு காலம் தாமதமாகி செல்ல, அதில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் தொழில்நுட்பம் தான் காரணம். அவதார் போன்ற படங்களை எடுத்து முடிக்க கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஆகியிருக்கிறது. கோச்சடையான் ஆக்ஷ்ன் படம் கிடையாது, டெக்னாலாஜி நிறைந்த படம். படத்தின் கதை கூட டெக்னாலஜி நிறைந்த கதை தான். இதில் பணியாற்றி இருப்பவர்கள் எல்லாம் பெரிய பெரிய ஆர்ட்டிஸ்ட்டுகள். தொழில்நுட்பம், கிராஃபிக்ஸ் ஆகியவற்றுக்கு நிறைய கால அவகாசம் தேவைப்பட்டது. மார்ச் 9-ஆம் தேதி படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெறுவுள்ளது. படம் வெளியாகும் தேதி இன்னும் முடிவாகவில்லை.


பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தின் மூலம் அப்பாவை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது பெருமையாக உள்ளது. கோச்சடையான் படத்தை பற்றி இதுவரை வெளிவராத ஒரு தகவலை சொல்லப்போகிறேன். இந்தப்படத்தில் மறைந்த காமெடி நடிகர் நாகேஷூம் நடித்துள்ளார். உண்மையில் இந்தப்படத்தில் அவர் நடிக்கவில்லை. மோஷன் கேப்ட்சரிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவரது முகம் மற்றும் உடலை வைத்து அவரும் நடித்தது போன்று எடுத்துள்ளோம். திரையில் ரசிகர்கள் பார்க்கும்போது நாகேஷ், நிஜத்தில் நடித்தது போன்ற உணர்வை ஏற்படுத்தும். கோச்சடையான் படத்தின் ஆடியோ சி.டி.யின் கவர்பேஜிலேயே நாகேஷின் உருவத்தை வெளியிட்டுள்ளோம். இதன்மூலம் அவருக்கு இப்படத்தை சமர்ப்பிக்க எண்ணியுள்ளோம். என செளந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்