Home  |  திரை உலகம்

நாகராஜ சோழன் MA, MLA ( Nagaraja Cholan MA, MLA )

நாகராஜ சோழன் MA, MLA ( Nagaraja Cholan MA, MLA )

Movie Name: Nagaraja Cholan MA, MLA நாகராஜ சோழன் MA, MLA
Hero: SATHYARAJ
Year: 2013
Movie Director: MANIVANNAN
Movie Producer: V House Production
Music By: JAMES VASANTHAN


வாரிசு அரசியல், அரசியல் கொலைகள், உட்கட்சி விவகாரம், கட்சி தாவுதல், எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவது, கட்சித் தலைமைக்கே ஆட்டம் காட்டுவது , என எல்லா விஷயங்களும் இந்தப்படத்தில் இருக்கிறது. ஒரு மலைப்பகுதியை வெள்ளைக்கார வியாபாரிகளிடம் விற்பதற்கு பேரம்பேசுகிறார் முதலமைச்சர். அந்த மலைவாழ் மக்களின் வலிகளையும், போராட்டத்தையும் படத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். சிறையில் இருக்கும் நாகரஜாசோழனை கட்சித்தலைமை பகைத்துக்கொள்ள, முதலமைச்சரின் ஊழல் ஆதாரங்களை வெளியிடுவேன் என்று போலீசை மிரட்டுகிறார் நாகராஜசோழன்.

சிறையில் இருந்து வெளியே வந்ததும் கட்சித்தலைமையை மிரட்டி துணைமுதல்வர் பதவியில் அமர்கிறார் நாகராஜசோழன். தமிழ்நாட்டு அரசியலில் முக்கியமான புள்ளியாக இருக்கும் நாகராஜசோழன் தன் மகனை ஒரு இந்திய அரசியல்வாதியாக்க கனவுகாண்கிறார். ஆனால், அவரது மகனோ ஒரு ஏழை பெண்ணை காதல் திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்துகிறார். வெள்ளைகாரன் தமிழகத்தில் தொழிற்சாலை தொடங்க அவனுக்கு ஒரு காட்டுப்பகுதியை கொடுக்க நாகராஜழோழன் முடிவெடுக்கிறார். ஆனால், சில நேர்மையான அதிகாரிகள் அதற்கு சம்மதிக்காததால், அவர்களை தீர்த்துக்கட்ட, பிரச்சனை பெருசாகிறது.

இதற்குள் எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைபேசி தன் கட்சிக்குள் சேர்த்துக்கொண்டு, தன்னை முதலமைச்சராக்கும் படி கட்சித்தலைமைக்குச் செக். பிறகென்ன மலைவாழ் மக்களின் போராட்டங்கள் பலனளிக்காமல் அவர்கள் போலீசால் சிறைப்படுத்தப்படுகிறார்கள். அவர்களை வழிநடத்திய சீமான் போராட்டத்தைக் கைவிடவேண்டிய சூழல் வருகிறது. ஆடிய ஆட்டங்களெல்லாம் அடங்கிவிட, தன் சொந்த மகனே நாகராஜசோழனுக்கு ஆப்பு வைக்கிறார். இதற்கிடையில நாகராஜசோழன் என்கிற அம்மாவாசயும் மணிமாறன் என்கிற மணியனும் அடிக்கிற லொள்ளு இருக்கே, சீரியசான விஷயங்களை காமெடியோடு போறபோக்கில் அடித்துவிடுவது மணிவண்ணனுக்கே உரிய ஸ்டைல்.

தன் வில்லத்தனமான நடிப்புக்கு வேறுயாரும் நிகரில்லை என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் சத்யராஜ். மணிவண்ணனும் அதே குசும்போட இருக்கிறார். . சீமான் அரசியல் மேடைகளில் பேசுகிற அதே உணர்ச்சியுடன் படத்திலும் பேசி நடித்திருக்கிறார். படத்தில் மலைவாழ் மக்களின் வலிகளை நாம் புரிந்துகொண்டாலும், அதைக் காட்சிப்படுத்திய வித்தில் ஒரு செயற்கைத்தனம் இருந்தது. திரைக்கதையை இன்னும் விறுவிறுப்பாக அமைத்திருக்க முடியும். காட்சிகள் துண்டு துண்டாக இருப்பது படத்தின் மைனல். ஜேம்ஸ் வசந்தனின் இசை சுமாரானது என்றே சொல்ல முடியும். டி.ஷங்கரின் தரமான ஒளிப்பதிவு பாராட்டுக்குறியது.

  16 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்