Home  |  திரை உலகம்

நான் தான் பாலா ( Naan Than Bala )

நான் தான் பாலா ( Naan Than Bala )

Movie Name: Naan Than Bala நான் தான் பாலா
Hero: VIVEK
Heroine: SWETHA
Year: 2014
Movie Director: R. Kannan
Movie Producer: SSS Entertainments
Music By: Venkat Krishi


விவேக்கின் கதை நாயகப் பிரவேசம், காமெடி பாத்திரங்கள் அருகிப் போன சூழலில், இதை ஒரு விஷப் பரிட்சையாக எடுத்துக் கொண்டு, இருந்த பெயரையும் காலி பண்ணிவிட்டார்.
பெருமாள் கோயில் குருக்கள், சட்டையுடன்தீர்த்தம் தருவதும், தீபாராதனை காட்டுவதும், அனைத்து ஆன்மீகவாதிகளின் மனங்களிலும், கொந்தளிப்பை ஏற்படுத்தும். திரைக்கதையில் இம்மாதிரி சுரங்க ஓட்டைகள் வராமல் இருக்க சினிமா “ஐயர்” களைக் கேட்டிருக்கலாம். கோட்டை விட்டதில், ஓட்டை பெரியதாகி, படத்தையே விழுங்கி விட்டது. நடிப்பைப் பொறுத்தவரை, விவேக் மெனக்கெட்டிருக்கிறார். ஆனால் அவருக்கு பாத்திரம் பொருந்தவில்லை, சமஸ்க்ருதம் வாயில் நுழையவில்லை என்பதுதான் படத்தின் பெரிய மைனஸ். என்னதான் சீரியஸாக அவர் பார்த்தாலும், அது காமெடி லுக் ஆகிவிடுகிறது.

சின்னப் பெண்ணாக, பல படங்களில் வந்த ஸ்வேதா, ரசிகனை சோர்வடைய வைக்கிறார். பற்றாத குறைக்கு டூயட்டில் அவர் போடும் ஆட்டம், மொத்தமாக அவரைக் கவிழ்த்து விடுகிறது.
செல் முருகன், மயில்சாமி நகைச்சுவை வசனங்கள் எல்லாம், விவேக்கிற்காக எழுதப்பட்டவை. அவர் நாயகனாக ஆனதால், வேறு வழியில்லாமல், அவை செல்லின் வாயில் விழுந்து, செத்துப் போகின்றன.
உருப்படியான நடிப்பைத் தந்தவர்கள் புதுமுகம் வெங்கட்ராஜும், தென்னவனும். அசப்பில், மலையாள நடிகர் லாலைப் போலிருக்கும் தென்னவன், இனி பெயர் சொல்லும் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வரும். வாழ்த்துக்கள். வெங்கட்ராஜ், தனி ஹீரோவாக வலம் வருவதற்கு உண்டான திறமையைப் பெற்றுள்ளார். பாராட்டுக்கள். கொஞ்ச நேரமே வந்தாலும் தென்னவனின் மனைவியாக வரும் சுஜாதா அசத்துகிறார்.
பாட்டிகள் பாடும் “ திருவாய்மொழி அழகா” நல்ல பாட்டு. பழைய மெட்டில் ஒலிக்கிறது “உயிரே உனக்காகப் பிறந்தேன்” அனைத்து விருந்து பதார்த்தங்களையும் உள்ளடக்கிய “ போஜனம் செய்ய வாருங்கள்” ஒரு வித்தியாசமான பாட்டு. இடையில் வரும் “ பாவைக்காய் பிரட்டல், கத்தரிக்காய் துவட்டல்” வரிகள், எச்சில் ஊற வைக்கின்றன.

“ விஜய் இந்தக் கடையிலே நகை வாங்கச் சொல்றாரு. சூர்யா அந்தக் கடையிலே வாங்கச் சொல்றாரு. விக்ரம், மொத்தமா வாங்கின நகையை, அந்தக் கடையிலே, அடகு வைக்கச் சொல்றாரு.. ஒரே குழப்பமா இருக்கு “
பாலா ( விவேக்) கும்பகோணத்தில், ஒரு பெருமாள் கோயில் அர்ச்சகர். ஒருநெருக்கடியில் அவருக்கு பண உதவி செய்யும் பூச்சி ( புதுமுகம் வெங்கட்ராஜ்) ஒரு கூலிக் கொலைகாரன். பெற்றோரை இழக்கும் பாலா, பூச்சியைத் தேடி காஞ்சிபுரம் வர, அவனோடு நட்பு உண்டாகிறது. கூடவே போளி விற்கும் விசாலியுடன் ( ஸ்வேதா ) காதல். பூச்சியின் உண்மை முகம் தெரிய வரும்போது, பாலாசந்திக்கும் இக்கட்டுதான் இடைவேளை. பாலா என்ன ஆனான்? பூச்சி திருந்தி, தன் முதலாளி காட்டூரானை ( தென்னவன் ) காட்டிக் கொடுத்தானா? என்று இழுத்து சொல்லியிருக்கிறார்கள்.

  13 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்