Home  |  அறுசுவை

ஆட்டுக்கால் சால்னா (Mutton Leg Salna)

தேவையானவை :

ஆட்டுக்கால் - 4 கால்
வெங்காயம் - 2  (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
மல்லித்தூள் - 3 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - கால் டீஸ்பூன்
சில்லி பவுடர் - ஒரு டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - கால் டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
மல்லிக்கீரை, கறிவேப்பிலை - சிறிது (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2
தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன்
முந்திரி பருப்பு - 8
மைதா - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்
 


செய்முறை :


1.மிக்ஸ்சியில் தேங்காய் மற்றும் முந்திரி பருப்பை நன்றாக அரைத்து கொள்ளவும்.சுத்தம் செய்த ஆட்டுக்காலை மைதாமாவு, சிறிது உப்பு சேர்த்து கலந்து சிறிது நேரம் ஊற வைக்கவும்.ஆட்டுக்காலை கழுவி குக்கரில் போட்டு நறுக்கின வெங்காயம், தக்காளி, மல்லிக்கீரை, மசாலாத்தூள் வகைகள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கால் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.

2.கொதி வந்த பின்பு குக்கரை மூடி  3 விசில் வந்த பின்பு அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். இளங்காலாக இருந்தால் அரைமணி நேரம், சிறிது வழுவாக இருந்தால் ஒரு மணி நேரம் வைத்து வேக வைக்கவும்.கால் வெந்து விட்டதை உறுதி செய்துக் கொண்டு அரைத்த தேங்காய், முந்திரிபருப்பு விழுதை சேர்க்கவும்.மிதமான தீயில் வைத்து கால் மணி நேரம் கொதிக்க விடவும்.தேங்காய் வாடை அடங்கி சால்னா நெலுநெலுப்பாக இருக்கும்.பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், கருவேப்பிலையை இளஞ்சிவப்பாக வதக்கி கொட்டவும்.

Mutton Leg Salna

Ingredients for Mutton Leg Salna:

 

Mutton Leg-4

Onion-2(Chopped)

Tomato-2(Chopped0

Coriander Powder-3tsp

Turmeric Powder-1/4tsp

Chilly Powder-1tsp

Ginger, Garlic Paste-2tsp

Garam Masala-1/4tsp

Oil-2tbsp

Coriander Leaves, Curry Leaves-Little (Chopped)

Green Chilly-2

Grated Coconut-4tbsp

Cashew Nuts-8

Maida-2tbsp

Salt- as Needed

Pepper powder-1tsp

Cumin powder-1tsp

 

Procedure to make Mutton Leg Salna:

 

1. Make a paste of coconut and cashew nuts finely. Marinate the washed mutton legs along with maida and salt for few hours. Put the marinated mutton legs in pressure cooker along with chopped onion, tomato, coriander leaves, given masala powder, ginger, garlic paste and add water to cover this masala and allow to boil well.

2. Then cover the cooker and allow 3 whistle, and then put in low flame. If mutton legs are fresh pieces it will take half an hour to cook, unless it takes 1 hour. Then add grinded coconut, and cashew nuts. Allow medium flame for ¼ hour. When coconut raw smell subsides, remove from flame. Salna is ready. Now heat oil in a pan, fry onion and curry leaves and put in to salna.

  08 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!