Home  |  திரை உலகம்

முத்து நகரம் திரைவிமர்சனம் !!

நடிகர்கள்: விஷ்வா, கே.திருப்பதி, ரவி, தீப்பெட்டி கணேசன்,

 

நடிகை : அஸ்ரிக்

 

இசை: ஜெய் பிரகாஷ்

 

ஒளிப்பதிவு: சூர்யா

 

இயக்கம்: கே.திருப்பதி

 

தயாரிப்பு: ஏ.முருகன்

 

படத்தில் நாயகன் விஷ்வா ஓரு ஆட்டோ ஓட்டுனர். அவருக்கு நான்கு நண்பர்கள். அந்த நண்பர்களில் ஒருவரை, அந்த ஊரு இன்ஸ்பெக்டர், ஒரு வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்து அடித்து,உதைத்து விடுகிறார். பிறகு உண்மையான திருடன் கிடைத்ததும் அந்த நண்பரை ரிலீஸ் செய்கிறார். இதனால் கடுமையான கோபத்தில் இருக்கும் அந்த நண்பர், இன்ஸ்பெக்டரை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என நண்பர்களுடன் சேர்ந்து திட்டம் தீட்டுகிறார்.

 

ஒரு நாள் இரவு நேரத்தில், இன்ஸ்பெக்டர் வீட்டில் புகுந்த நண்பர்கள், அவரது துப்பாக்கியை திருடி ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் புதைத்து வைக்கிறார்கள். துப்பாக்கி களவு போனதால் இன்ஸ்பெக்டரை பணிநீக்கம் செய்கிறார்கள். இன்ஸ்பெக்டரோ, துப்பாக்கியை திருடிய திருடனை கண்டுபிடிக்க அலையோ, அலைன்னு அலையறாரு. அப்போது, கதையில் ஒரு திருப்பம் ஏற்படுகிறது, இன்ஸ்பெக்டர் துபாக்கியை வைத்து, ஊரில் மூன்று கொலைகள் நடக்குது. இந்த மூன்று கொலைகளுக்கு காரணம் யாருன்னு தெரியாம, நண்பர்களுக்குலேயே சந்தேகம் கிளம்புது. யார் அந்த கொலைகளை செய்தது? என்? எதற்கு? எப்படி? என்பதுதான் படத்தின் மீதி கதை.

 

கதை நன்றாக இருந்தாலும், இயக்குனர் அதை சொன்னா விதத்தில் குழப்பியிருக்கிறார். அதுவும் 3 ட்ரக்கில் கதை சொல்வது முடியல..

 

 

ஹீரோ, ஹீரோயினை லவ்பன்றதபாத்து, ஹீரோயின் அப்பா ஹீரோவை கொள்ள தாதா உதவியை நாடுறாரு. அந்த தாதாவோட ஆள்தான் அந்த ஊரு இன்ஸ்பெக்டர். 
அடுத்ததா, ஹீரோவோட, நண்பரின் அம்மாவுக்கு உடம்பு சரியில்லாம போகுது. இதற்கு ஆபரேஷன் பன்றத்துக்கு பணம் தேவைப்படுது.

ஹீரோ, ஹீரோயினை லவ்பன்றதபாத்து, ஹீரோயின் அப்பா ஹீரோவை கொள்ள தாதா உதவியை நாடுறாரு. அந்த தாதாவோட ஆள்தான் அந்த ஊரு இன்ஸ்பெக்டர். 
அடுத்ததா, ஹீரோவோட, நண்பரின் அம்மாவுக்கு உடம்பு சரியில்லாம போகுது. இதற்கு ஆபரேஷன் பன்றத்துக்கு பணம் தேவைப்படுது.

 

 

நாயகன் விஸ்வா மற்றும் அவரது நண்பர்கள் படம் முழுவது பரட்டை தலையுடன் வலம் வருவது ஏனென்று புரியவில்லை. அதுவும் முக்காவாசி நேரம் டாஸ்மாக்கே கதியுனு கிடப்பது முடியால...

 

நாயகியாக வரும் அஸ்ரிக் பரவாயில்லை. படத்தில் அவர் மட்டும் தான் ஆறுதல் என்பது இளம் ரசிகர்களுக்கு புரியும். 

 

காமெடிக்கு, கஞ்சா கருப்பு, காதல் தண்டபாணி, காதல் சுகுமார், பாய்ஸ் ராஜன் என பட்டாளமே இருந்தாலும், சிரிப்பு வரமாட்டேன்குது.

 

ஜெய் பிரகாஸ் இசையில் பாடல்கள் ஒனுரெண்டு பரவாயில்லை. 

 

மொத்தத்தில் முத்துநகரம் பில்டிங் ஸ்ட்ராங், பட் பேஸ் மட்டம் கொஞ்சம் வீக் !!

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்