Home  |  அறுசுவை

காளான் புலவு (Mushroom Pulao)

தேவையானவை :

 

காளான் -1 கப் (நறுக்கியது)

தனியா பொடி -2 டீஸ் ஸ்பூன்

கரம் மசாலா- 2 டீஸ் ஸ்பூன்

பச்சை மிளாகாய்- 3

இஞ்சி- 1 துண்டு

ஏலக்காய், பட்டை- சிறிது

பாசுமதி அரிசி- 1 கப்

வெண்ணெய், எண்ணெய்- தேவையான அளவு

உப்பு -தேவையான அளவு

கடுகு- 1/2 டீஸ் ஸ்பூன்

 

 

செய்முறை :

 

1.பச்சை மிளகாய்,இஞ்சி இரண்டையும் விழுதாக அரைத்துக்கொள்ளவும். அடுப்பில் ஒரு வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொரிந்ததும் பின் பட்டை, ஏலக்காய் போட்டு அரைத்துள்ள விழுதையும் போட்டு நன்கு வதக்கவும். பிறகு அதனுடன் தனியா பொடி, கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். இப்போது இதனுடன் காளானையும் சேர்த்து கிளறவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, காளான் வேகும் வரை நன்கு கிளறிக் கொண்டே இருக்கவும்.

 

2.மற்றொரு அடுப்பில் வாணலியைக் காய வைத்து, அதில் சிறிது வெண்ணெய் விடவும். கழுவி சிறிது நேரம் காயவைத்த பாஸ்மதி அரிசியைப் போட்டு லேசாக வறுக்கவும் அரிசியுடன் இரண்டு மடங்கு தண்ணீர் சேர்த்து வாணலியை மூடி வைக்கவும். சிறிது நேரம் விட்டு ஒன்றிரண்டு முறை கிளறி விட்டு மூடி வைக்கவும்.

 

3.அரிசி நன்றாக வெந்து சாதம் உதிரியாக வரும். இப்போது ஒரு பாத்திரத்தில் முதலில் சாதம் கொஞ்சம், தயாராக உள்ள காளான் மசாலாவைப் போட்டு, பிறகு அதன் மீது மீண்டும் சாதம் போட்டு கிளறவும். இதேபோல இரண்டையும் மாற்றி மாற்றி போட்டு நன்கு கிளறி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

Mushroom Pulao

Ingredients for Mushroom Pulao:

 

Mushroom-1 Cup (Chopped)

Coriander Powder-2 Tsp

Garam Masala-2 Tsp

Green Chilly-3

Ginger-1 Piece

Cardamom, Cinnamon-Little

Basmati Rice-1 cup

Butter, Oil-as Needed

Salt-as Needed

Mustard-1/2 Tsp

 

Procedure to make Mushroom Rice:

 

1.Grind green chilly and ginger very finely. Heat oil in a pan, add mustard, cinnamon, cardamom, ground paste and fry well. Then add coriander powder, garam masala, salt and saute well. Now add mushroom and stir well. Allow medium flame, stir frequently until mushroom boiled well.

2. Heat a pan, add butter and basmati rice and fry slightly. Then add 2 cup of water and cover the pan. Stir frequently and let to boil well.

3. Now take a vessel, place little amount of boiled rice in ii and add mushroom masala and then add remaining boiled rice and stir well. Finally garnish with coriander leaves.

 

 

 

 

 

  14 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!