Home  |  அறுசுவை

மஷ்ரூம் பாலக் பிரியாணி (Mushroom Palak Biryani)

தேவையானவை :

 

பாசுமதி அரிசி - 300 கிராம்

பாலக் கீரை - 1 கட்டு

மஷ்ரூம் - 100 கிராம்

பச்சை பட்டாணி - 1/4 கப்

பெரிய வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 6

எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்

மல்லி இலை - சிறிதளவு

புதினா - சிறிதளவு

தக்காளி - 1

இஞ்சி - ஒரு சிறிய துண்டு

ஏலம் - 2

சீரகம் - 1/2 டீஸ் ஸ்பூன்

சோம்பு - 1/2 டீஸ் ஸ்பூன்

பூண்டு - 6 பல்

கரம் மசாலா - 1/2 டீஸ் ஸ்பூன்

பட்டை - 1 அங்குல துண்டு

லவங்கம் - 3

உப்பு - 3/4 டீஸ் ஸ்பூன் 

பிரியாணி இலை - 1

 

செய்முறை :

 

1.முதலில் வெங்காயம், தக்காளி, மஷ்ரூம் ஆகியவற்றை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும். கீரையை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். அரிசியை கழுவி பச்சை பட்டாணியுடன் சிறிது உப்பு, ஒரு டீஸ் ஸ்பூன் எண்ணெய், தேவையான அளவு நீர் சேர்த்து வேக வைத்து எடுத்து ஆற விடவும்.

 

2.பூண்டு, பச்சை மிளகாய்,இஞ்சி,புதினா, பாதி மல்லி இலை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம், ஏலம், சோம்பு, சீரகம் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.அதன்பின்பு நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.பிறகு அரைத்த விழுதையும் சேர்த்து வதக்கவும்.

 

3.அத்துடன் நறுக்கிய மஷ்ரூம் சேர்த்து நீர் பிரிந்து வற்றும் வரை வதக்கவும்.பின்னர் கீரையை சேர்த்து வதக்கி ஐந்து நிமிடம் வேக விடவும். கீரை நன்கு வெந்த பின்பு, தக்காளி சேர்த்து பிரட்டி, கரம் மசாலா, உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி இறக்கவும்.பிறகு ஆற வைத்த சாதத்தை வதக்கியவற்றுடன் சேர்த்து கலக்கி மல்லி இலை தூவி ஐந்து நிமிடம் மூடி வைத்து மிதமன் தீயில் வைக்கவும்.இப்போது சுவையான மஷ்ரூம் பாலக் பிரியாணி ரெடி. 

Mushroom Palak Briyani

Ingredients for Mushroom Palak Briyani:

 

Basmati Rice-300 G

Palak Keerai-1 Bunch

Mushroom-100 g

Green Peas-1/4 Cup

Large Onion-1

Green Chilly-6

Oil-4 tbsp

Coriander Leaves-Little

Mint-Little

Tomato-1

Ginger-1 Small Piece

Cardamom-2

Cumin-1/2 Tsp

Fennel-1/2 Tsp

Garlic-6 Flakes

Garam Masala-1/2 Tsp

Cinnamon-1 Inch Piece

Cloves-3

Salt-3/4 Tsp

Bay Leaf-1

 

Procedure to make Mushroom Palak Briyani:

 

1. Chop the onion, tomato and mushroom. Chop the palak very finely. Boil the washed rice along with green peas, salt, 1 tea spoon of oil and water and then allow to cool.

2. Grind garlic, green chilies, ginger, mint and half quantity of coriander leaves very finely. Heat oil in a pan, add cinnamon, cloves, cardamom, fennel, cumin and let to splutter. Then add chopped onion and fry till get golden color. Then add ground paste and saute well.

3. Then add chopped mushroom and fry till the water gets dry. Now add palak and fry for 5 minutes. Then add tomato, garam masala,salt and fry for 2 minutes and remove from flame. Now mix the boiled rice together with prepared masala and garnish with coriander leaves. Put this on medium flame for 5 minutes. Tasty mushroom palak briyani is ready to serve.

 

 

 

 

  14 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!