Home  |  அறுசுவை

காளான் குருமா (Mushroom Kurma)

தேவையானவை :

காளான் - 200 கிராம்
சின்ன வெங்காயம் - 100 கிராம் (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
பட்டை - 3
கிராம்பு - 3
சோம்பு - 1/2 டீஸ்பூன்
கசகசா - 1/4 டீஸ்பூன்
தேங்காய் - 1/4 மூடி
மல்லித்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - 1 கொத்து
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்


செய்முறை

1.சுத்தம் செய்த காளானை வெந்நீரில் போட்டு உடனே எடுத்து பெரிய துண்டுகளாக வெட்டவும்.தேங்காய், கசகசா, சோம்பு ஆகியவற்றையும் தனியே தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.

2.ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, போட்டு தாளித்து, பிறகு நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும்.மேலும் இதனுடன் இஞ்சி பூண்டு விழுது, சேர்த்து வதக்கவும். அடுத்து நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.பின்னர் வெட்டிய காளானைச் சேர்த்து நன்கு வதக்கவும்.

3.மல்லித்தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கலக்கிய பின்னர், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.இதனுடன் தனியே அரைத்து வைத்துள்ள தேங்காயைச் சேர்த்து மீண்டும் நன்றாக கொதிக்க விடவும்.இறுதியாக  சிறிது நேரம் அடுப்பை மிதமான தீயில் எரியவிட்டு,கொத்துமல்லி தழை சேர்த்து இறக்கவும்.

Mushroom Kurma

Ingredients for Mushroom Kurma:

Mushroom-200g

Small Onion-100g (Chopped)

Tomato-2(Chopped)

Cinnamon-3

Cloves-3

Fennel-1/2tsp

Poppy Seed-1/4tsp

Coconut-1/4cup

Coriander Powder-1tbsp

Chilly Powder-1/4tsp

Turmeric Powder-1/4tsp

Coriander Leaves-1Bunch

Oil-Enough Need

Salt-Enough Need

Ginger, Garlic Paste-1tsp

Ingredients to make Mushroom Kurma:

1. Wash mushroom in hot water and cut in to big pieces. Make a paste of coconut, poppy seed and fennel along with water.

2. Heat oil in a pan, add cinnamon, cloves, chopped onion and sauté well. Then add ginger garlic paste and fry well.  After that add tomato and mushroom pieces one by one and sauté well.

3. Put coriander powder, chilly powder, turmeric powder and stir well. Add water and grinded coconut paste and allow to boil well. Allow low flame for few minutes, then garnish with coriander leaves and remove from fire.

  08 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!