Home  |  திரை உலகம்

முண்டாசுப்பட்டி ( Mundaasupatti )

முண்டாசுப்பட்டி ( Mundaasupatti )

Movie Name: Mundaasupatti முண்டாசுப்பட்டி
Hero: VISHNU
Heroine: NANDHITA
Year: 2014
Movie Director: RAM
Movie Producer: THIRU KUMARAN ENTERTAINMENT
Music By: Sean Roldan


முண்டாசுப்பட்டி கிராமத்தில் ஒரு மூட நம்பிக்கை. யாராவது போட்டோ எடுத்துக் கொண்டால் பொசுக்கென்று செத்துப்போய்விடுவார்கள் என்று. 1947-ல் நடந்த ஒரு ப்ளாஷ்பேக் சம்பவம். ஒரு வெள்ளைக்காரர் அந்த ஊருக்கு வருகிறார். ஊர் மக்களை போட்டோ எடுத்துச் செல்கிறார். அடுத்த சில நாட்களில் பல நோயில் விழுந்து இறக்கின்றனர். முண்டாசுப்பட்டி அன்று முதல் போட்டோ எடுத்துக் கொள்வதில்லை அந்த ஊர்க்காரர்கள். இப்படியிருக்க, அந்த ஊர் மக்களின் குலதெய்வ சிலையை திருட வருகிறது ஒரு கும்பல். சிலையைத் திருடிக்கொண்டு போகும்போது, ஒரு எரிகல், சாமி சிலை இருந்த இடத்தில் விழுகிறது. தங்கள் குல தெய்வம்தான் வானத்திலிருந்து கல்லாக விழுந்தது என நம்புகிறார்கள் மக்கள். எரிகல் விழுந்ததை அறிந்த வெள்ளைக்காரர் மறுபடியும் முண்டாசுப்பட்டிக்கு வருகிறார். அவரை அடித்து விரட்டுகிறார்கள் மக்கள். தப்பித்துச் செல்லும் வெள்ளைக்காரர் அந்த எரிகல்லின் ஒரு சிறு துண்டை மட்டும் எடுத்துக் கொண்டு போகிறார். அதை ஆய்வு செய்ததில், அந்த கல் விலைமதிக்க முடியாத கனிமப் பொருள் என்பதைக் கண்டறிகிறார்.

இப்போது 1983-க்கு வருகிறது கதை. போட்டோக் கடை வைத்திருக்கும் விஷ்ணுவுக்கு ஒருநாள் முண்டாசுப்பட்டி கிராமத்தில் சாகக் கிடக்கும் பெரியவரை படமெடுக்கச் சொல்லி அழைக்கிறார்கள். பணத்துக்காக அதற்கு ஒப்புக்கொண்டு தன் நண்பன் காளியுடன் முண்டாசுப்பட்டி கிராமத்துக்கு வருகிறார். அங்கு நந்திதாவைப் பார்க்கும் விஷ்ணு, அவள்தான் இறக்கப் போகும் ஊர் தலைவரின் பேத்தி என்பதையும் அறிகிறான். ஆனால் பெரியவர் இறந்தபிறகுதான் அவரை படம் எடுக்கவேண்டும் என்று மக்கள் அடம்பிடிக்க, அங்கேயே தங்குகிறார்கள். அப்படியே நந்திதாவிடம் காதலைச் சொல்கிறான் நாயகன். நந்திதா மறுத்துவிட, விஷ்ணுவின் ஒருதலைக் காதல் தொடர்கிறது. பெரியவர் இறந்ததும் அவரது உடலைப் படமெடுக்கிறார் விஷ்ணு. ஆனால் போய் பிரிண்ட் போட்டால், பெரியவர் படமே பதிவாகவில்லை. பதறிப் போய்,

முனீஷ்காந்த் என்வரை தாஜா செய்து, பெரியவர் மாதிரி வேஷம் போட்டு படமெடுத்து கொண்டு போய் நந்திதா வீட்டில் தருகிறார்கள். அப்போதுதான் செத்துப்போன பெரியவரின் தம்பி மகன்தான் இந்த முனீஷ்காந்த் என்று தெரிகிறது. போட்டோ மூட நம்பிக்கை, விண்கல் திருடும் முயற்சி, முனீஷ்காந்திடம் மாட்டிக் கொள்ளும் விஷ்ணு, இந்த மூன்று விஷயங்களும் எப்படி ஒரு புள்ளியில் இணைகின்றன என்பதுதான் மீதிக் கதை. விஷ்ணுவுக்கு வித்தியாசமான வேடம். அவரும் நன்றாகவே நடித்திருக்கிறார். ஆனால் குரல் உச்சரிப்பு எல்லா காட்சிகளுக்கும் ஒரே மாதிரி இருப்பதுதான் அவரது மைனஸ். பழைய நடிகர் சுதாகர் கெட்டப்பில் அச்சு அசலாக 80களின் இளைஞரை விஷ்ணு உருவில் பார்க்க முடிந்தது. நந்திதா பக்கத்துவீட்டுப் பெண் மாதிரி அத்தனை அடக்கமாக, இயல்பாக நடித்திருக்கிறார். முந்தைய படங்களை விட, இதில் பளிச்சென்று அழகாகக் காட்டியிருக்கிறார்கள். காளிக்கு இதில் பிரதான வேடம். கலக்கி இருக்கிறார். அவரும் விஷ்ணுவும் சேர்ந்து படத்துக்கு தனி காமெடியனே தேவையில்லாமல் செய்திருக்கிறார்கள். அப்புறம், அந்த முனீஷ்காந்த் என்கிற ராமதாஸ். வெளுத்துக் கட்டிவிட்டார். இனி சந்தானம், சூரிக்கு கொஞ்சம் டல்லடித்தாலும் ஆச்சர்யமில்லை. அந்த அளவுக்கு காமெடியில் ரகளை பண்ணியிருக்கிறார்.

  13 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
சர்வைவா பாடலை கேட்ட அஜித் என்ன சொன்னார் தெரியுமா- யோகி.பி தகவல்
அஜித் ரசிகர்களே அடுத்த அதிரடிக்கு தயாரா- ஒரு ஸ்பெஷல் தகவல்
ஜுலை 1ம் தேதிக்காக ஆவலாக காத்துக் கொண்டிருக்கும் விஜய் ரசிகர்கள்- அப்படி என்ன ஸ்பெஷல்
அஜித்தின் விவேகம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஸ்பெஷல் விஷயம்
அடங்கப்பா..! – பிக் பாஸ் நிகழ்ச்சியில் இத்தனை கண்டிஷன்களா?
ஒரு பக்கம் காவி, மறு பக்கம் சூரியன் – நெருக்கடியில் தளபதி நடிகர்…!
'தளபதி' டைட்டிலுக்கு பின்னால் இவ்வளவு பெரிய பழிவாங்கலா? கோலிவுட் ஆச்சரியம்
விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்
விஜய்யின் மெர்சல் படத்திற்கு கிடைத்த புதிய தலைப்பு- மாஸ் டிரண்ட் செய்த ரசிகர்கள்
எனக்கு செட் ஆகாத ஹீரோயின் இவர்தான்...! விஜய் சொன்னது