Home  |  திரை உலகம்

மூன்று பேர் மூன்று காதல் ( Moondru Per Moondru Kadal )

மூன்று பேர் மூன்று காதல் ( Moondru Per Moondru Kadal )

Movie Name: Moondru Per Moondru Kadal மூன்று பேர் மூன்று காதல்
Hero: ARJUN
Year: 2013
Movie Director: VASANTH
Movie Producer: Mahendra Talkies
Music By: YUVAN SHANKAR RAJA


மீண்டும் ஒரு காதல் கதையுடன் களமிறங்கியிருக்கிறார் இயக்குநர் வசந்த். ஊட்டியில் சாப்ட்வேர் பணியிலிருக்கும் விமல், சக பணியாளர் லாசினியை விழுந்து விழுந்து காதலிக்கிறார். ஆனால் கடைசியில் காதலிலிருந்து விலகிக் கொள்கிறார். அது ஏன் என்ற கேள்விக்கு, தான் சந்தித்த இரண்டு ப்ளாஷ்பேக் காதல்களைச் சொல்கிறார். அதில் ஒன்று' நாகர்கோயிலில் வசிக்கும் என்ஜிஓ சேரன் - பிஸியோதெரபிஸ்ட் பானு காதல் கதை. அடுத்தது, சென்னையைச் சேர்ந்த நீச்சல் பயிற்சியாளர் அர்ஜூன் - வீராங்கனை சுர்வின் காதல்.

இந்த மூன்று காதல்களையும் ஒரு நாவலாக எழுதி வெளியிடும் நிகழ்ச்சியில், அந்த காதல்களின் க்ளைமாக்ஸை சொல்கிறார் விமல். ஒவ்வொரு காதலுக்கும் நீள நீளமான வர்ணனைகள் மற்றும் காட்சியமைப்புகள். இரவில் யாருக்கும் தெரியாமல் நீச்சல் பயிற்சிக்குப் போகும் சுர்வின் காட்சியமைப்பு. இந்த மூன்று காதல்களில் பரவாயில்லை எனும் அளவுக்கு பக்குவமாக அமைந்திருப்பது சேரன் - பானு கதைதான்.

முதல் முறையாக அளவோடு நடித்திருக்கிறார் சேரன். பானுவின் தோற்றம், நடிப்பு இரண்டுமே அழகு! அர்ஜூன் - சுர்வின் காதலில் ஈர்ப்பே இல்லை. 110 மீட்டர் 51 செகன்ட்ஸ் என்ற அர்ஜூனின் இலக்குதானே அவர்கள் காதலுக்கு வில்லனாகிறது?! விமல் - லாசினி காதல் தேறவில்லை. இயக்குநர் வசந்த் வித்தியாசமாக சினிமா எடுக்க பிரயாசைப்பட்டிருக்கிறார். ஆனால் ஆமை வேகம், போஜன் கே தினேஷின் ஒளிப்பதிவு. சமீப கால படங்களில் ரசிக்க வைத்த காட்சிப் பதிவு இதுதான். இந்தப் படத்தின் பெரும் பலம் யுவன் சங்கர் ராஜாவின் அசத்தலான பாடல்கள் மற்றும் சுண்டியிழுக்கும் பின்னணி இசை.

  24 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
நாளை மெர்சல் இசை வெளியீடு... விஜய் பேசப் போகும் அரசியல் என்ன?
'விவேகம்' புயலை கண்டு பயந்து ஓடிய படங்கள்
மெர்சல் ரிலீசாகாது..!இப்படி ஒரு பிரச்சனையா!..
தளபதி ரசிகர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி- மெர்சல் ஸ்பெஷல்
'விவேகம்' ட்ரெய்லர்ல இதையெல்லாம் கவனிச்சீங்களா..? #VivegamTrailer
BiggBossல் இருந்து வெளியேறிய ஷக்தியின் முதல் பதிவு- இனி தான் என் ரியல் கேம் ஆரம்பம்
ஓவியாவை பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்ற இதுவே காரணம்..!
மெர்சல் படக்குழுவினர்களுக்கு விஜய் கொடுத்த சூப்பர் சர்ப்ரைஸ்
விவேகம் படத்தை பார்த்த பிறகு அஜித்தின் ரியாக்‌ஷன் இதுதான்
விஜய் படைத்த பிரமாண்ட சாதனை, தமிழகத்தில் தளபதி படம் மட்டுமே நிகழ்த்திய சாதனை