Home  |  திரை உலகம்

மூடர் கூடம் (Moodar Koodam)

மூடர் கூடம் (Moodar Koodam)

Movie Name: Moodar Koodam மூடர் கூடம்
Hero: Sentrayan
Heroine: OVIYA
Year: 2013
Movie Director: NAVEEN
Movie Producer: PASANGA PRODUCTIONS
Music By: Natarajan Sankaran



“நாலு திருடங்க. ஒரு வீட்டை கொள்ளை அடிக்க வர்றாங்க...” பாணியில் ஊன்னா தான்னா தனமாக மூடர்கூடத்தை புரிந்துக் கொண்டால், அது மொக்கைப்படமாகவே தெரியும். படத்தின் கடைசி பத்து நிமிடத்தில் இடம்பெறும் ‘நீயும் பொம்மை, நானும் பொம்மை’ பாடல்தான் ஒட்டுமொத்த உள்ளடக்கத்தின் வெளிப்பாடு. அந்த பொம்மைதான் வாழ்வில் நாம் தேடிக்கொண்டிருக்கும் மகிழ்ச்சியின் குறியீடு. நேரடியாகவே அந்த பொம்மையில் HAPPY LIFE என்று இயக்குனர் க்ளூ கொடுத்தும் புரிந்துகொள்ள முடியாத நாமெல்லாம் ஒன்றுகூடும் திரையரங்கம்தான் மூடர்கூடம். மகிழ்ச்சி நம்மிடையேதான் இருக்கிறது. அதை கண்டுகொள்ள முடியாத மூடர்களாக, அறிவுக் குருடர்களாக இருக்கிறோம் என்கிற எளிமையான மெசேஜைதான் இயக்குனர் தருகிறார்.

படத்தில் தலைகீழாக நிற்கும் தண்டனையை ஜெயப்பிரகாஷ் குடும்பத்தாருக்கு நாலு திருடர் கும்பல் தருவதெல்லாம் சும்மா நாம் சிரிக்க வைக்கப்பட்ட காட்சியல்ல. எதையாவது தலைகீழாக பார்ப்பதும் ஒரு பரிமாணம்தான். தீர்க்க முடியாத பிரச்சினைகளையும், சவால்களையும் ஒருவேளை தலைகீழாக பார்த்தால் சுலபமாக தீர்வுக்கு வந்துவிடலாம். எதிக்ஸ் திருடன் தனக்கு எழுதித்தரப்பட்ட எழுத்துகளை தலைகீழாக பார்ப்பது, அவனை பலமுறை தலைகீழாக நிற்கவைத்தும் அவனால் அந்த பொம்மையை அடையாளம் கண்டுகொள்ள முடியாதது, யதேச்சையாக பொம்மையை தலைகீழாக பிடித்திருக்கும்போது அவன் கண்டுகொள்வது... இதையெல்லாம் ஒருமுறை மறுபடியும் ‘ரீவைண்ட்’ செய்து பார்க்கும்போது, இயக்குனர் தேவையில்லாமல் எதையுமே படத்தில் நுழைக்கவில்லை என்பது புரியும்.ஒரு பாத்திரமாக நடித்திருக்கும் நவீன் அவ்வப்போது மார்க்சிஸம் பேசிக்கொண்டே இருக்கிறார்.

இதென்ன தேவையில்லாத இடைச்செருகல் என்று முதலில் சலிப்பாக தோன்றியது. மூடர்கூடம் நம்மை, நம் வாழ்க்கையை சுட்டும் படமென்பதால் வாழ்வியல் குறித்த சிறந்த சித்தாந்தமான ‘மார்க்சிஸம்’ இடம்பெறுவது பொருத்தமானதுதான் என்பதை படம் முடியும்போது உணரமுடிகிறது.உதாரணத்துக்கு ஆட்டோ குமார் பாத்திரத்தை எடுத்துக் கொள்ளலாம். “ஏய். எங்க பேட்டையிலே நான் எப்படி தெரிம்மா... அசால்ட் ஆயிடுவே” என்று ரவுசு கொடுப்பவரை பார்க்கும்போது ????? நினைவுக்கு வருகிறார்.இவர்கள் இருவரையும் கட்டுப்படுத்த இன்ஸ்பெக்டர் துப்பாக்கி நீட்டுகிறார். மூவருக்குமே உள்ளுக்குள் உதறல். “நான் சுடமாட்டேன்” என்று சலீம்பாய் முதலில் வாக்குறுதி கொடுக்கிறார். இன்ஸ்பெக்டரும் “நானும் சுடமாட்டேன்” என்று ஒப்பந்தத்துக்கு வருகிறார். வக்காவும் “அப்போன்னா நானும் சுடமாட்டேன்” என்கிறார். கூட இருக்கும் அல்லக்கை “தல நம்ம கையிலேதான் துப்பாக்கியே இல்லையே” என்கிறான். “சுடுறதுக்கு தாண்டா துப்பாக்கி வேணும்.

  17 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பிடிக்கல… மாத்துங்க! அஜீத் மறுப்பால் அதிர்ச்சி!
விஜய்யின் அடுத்தப்படமும் இதே ஸ்டைல் தான்
கமலின் கருவிழி பிதுங்குகிறதா..?? நிகழ்ச்சி தொடங்கி அடுத்த நாளே வெளியானது, விஜய் டிவி “பிக் பாஸ்’ ஷோவ
இது எல்லாமே விஜய் ரசிகர்களால் தான்- மனம் நெகிழும் பிரபலம்
'தல 58' படத்தின் இயக்குனர் இவர்தான் உறுதியான தகவல்!
விஜய்-முருகதாஸ் படத்திற்கு இவர் தான் இசையமைப்பாளரா?
சர்வைவா பாடலை கேட்ட அஜித் என்ன சொன்னார் தெரியுமா- யோகி.பி தகவல்
அஜித் ரசிகர்களே அடுத்த அதிரடிக்கு தயாரா- ஒரு ஸ்பெஷல் தகவல்
ஜுலை 1ம் தேதிக்காக ஆவலாக காத்துக் கொண்டிருக்கும் விஜய் ரசிகர்கள்- அப்படி என்ன ஸ்பெஷல்
அஜித்தின் விவேகம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஸ்பெஷல் விஷயம்