Home  |  திரை உலகம்

கமல் நடிக்கும் பாபநாசத்தில் மோகன்லால் மகன்!

மலையாள நடிகர் மம்முட்டி மகனை தொடர்ந்து, மோகன்லாலின் மகன் பிரணவ்வும் தற்போது திரைத்துறைக்கு அடியெடுத்து வைத்துள்ளார்.


மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவரான மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் திரையுலகில் அறிமுகமாகி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். 


இதனை தொடர்ந்து, மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லாலின் மகன் பிரணவ்வும் எப்போது ஹீரோவாக களமிறங்குவார் என்கிற எதிர்பார்ப்பு மலையாள ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது. 


ஆனால் மோகன்லாலோ தனது மகனுக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை என்று ஏற்கெனவே சொல்லிவிட்டார்.


இருந்தாலும் அவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக மோகன்லால் நடித்த ‘சாகர் ஏலியாஸ் ஜாக்கி’ என்ற படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்திருந்தார் பிரணவ். 


தொடர்ந்து பிரணவ் ஹீரோவாக அறிமுகமாவார் என மலையாள ரசிகர்கர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் மோகன்லாலின் மகன் பிரணவ் தற்போது ஹீரோவாக 


அறிமுகமாகவில்லையாம், கமல் ஹாசன் தற்போது நடித்து வரும் ‘பாபநாசம்’ என்ற படத்தின் மூலம் உதவி இயக்குனராக அறிமுகமாகிறாராம்.  


பாபநாசம் படம் மலையாளத்தில், மோகன்லால், மீனா நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டானா த்ரிஷ்யம் படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்