Home  |  ஆன்மிகம்

மோகம் தீர்ந்ததும் காதல் முடிந்துவிடுமா?

“நான் வக்கீலாக இருக்கிறேன். விவாகரத்து கோரி என்னிடம் இளம் தம்பதிகள் வருவது அதிகரித்துவிட்டது, கலங்கிப்போகிறேன். காதல் என்பது உடல் இச்சையை அடிப்படையாகக் கொண்டதுதானா? மோகம் தீர்ந்ததும் காதலும் காய்ந்துவிடுகிறதா? அல்லது இளைஞர்களிடம் புரிந்துகொள்ளுதல் குறைந்துவிட்டதா?”
சத்குரு:
“ஆண், பெண் இருவருக்கும் அடுத்தவர்மீது பரஸ்பர ஆர்வம் பிறக்காவிட்டால், அடுத்த தலைமுறை என்று ஒன்று இருக்காது. இனவிருத்தி இடைவிடாமல் நடைபெறுவதற்காக இயற்கை நிகழ்த்தும் போதை விளையாட்டு இது. இனக்கவர்ச்சி எனும் போதை உடலில் ஏறி இருக்கும்போது, தாமாகவே ஆணும் பெண்ணும் நெருங்கி வருகிறார்கள்.
முழுமையான ஈடுபாடுகொள்ளாமல், கட்டாயத்தின் பேரில் எது நடந்தாலும், அதில் எனக்கு என்ன ஆதாயம் கிடைக்கும் என்று தான் மனம் கணக்கிடும்.
சமூகத்தில் யாரை புத்திசாலி என்று கருதுவீர்கள்? குறைவாகக் கொடுத்து, அதிகம் பெறத் தெரிந்தவரைத்தானே? கடைவீதியில் துவங்கி கல்யாணம் வரை கொடுப்பதைக் குறைத்து, பெறுவதை அதிகமாக்கிக்கொள்ள முடியுமா என்று பார்ப்பதில், உறவுகளிலும் கணக்கு நுழைந்துவிடுகிறது.
காதல்வயப்பட்டு உணர்ச்சிகளால் ஆளப்படும் நேரத்தில், இந்த ஆதாயக் கணக்குகள் முக்கியத்துவம் இழக்கின்றன. உணர்ச்சி வேகத்தில் எண்ணங்கள் கடத்தப் படுகின்றன. என்ன கிடைக்கிறது என்பதைவிட, என்ன கொடுக்கிறோம் என்பதுதான் அப்போது முக்கியமாகத் தோன்றுகிறது. அதே உணர்ச்சி திருமணத்திற்குப் பின்பும் தீவிரமாகத் தொடர்ந்தால், உறவும் சுகமாகத் தொடரும்.
கடைவீதியிலோ, பக்கத்து வீட்டுக்காரரிடமோ கொடுக்கல் வாங்கல் திருப்தி இல்லாமல் போனால், அவர்களுடன் பழகுவதை நிறுத்திவிடலாம். ஆனால், கல்யாணம் என்ற பெயரில் வாழ்க்கைத் துணை என்று வந்தவரோடு, கூண்டில் அடைபட்ட உணர்வு அல்லவா இங்கு மேலோங்கி இருக்கிறது? ஏதோ ஒருவிதத்தில் ஏமாற்றப்பட்டு, நீங்கள் அதிகம் கொடுப்பதாகவும், பதிலுக்குக் குறைவாகப் பெறுவதாகவும்தான் மனம் நினைக்கிறது. இதிலிருந்து தப்பிக்கமுடியாமல் தள்ளாட்டம் ஏற்படுகிறது.
உங்களை யாரோ சாமர்த்தியமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்று நினைத்துவிட்டாலே, அப்புறம் நிம்மதி ஏது?
திருமணம் முடிந்த கையோடு அந்தக் கணவனும் மனைவியும், அடுத்தவரின் அலமாரியைத் திறந்து பார்க்கக்கூடாது என்று ஓர் ஒப்பந்தம் போட்டுக்கொண்டனர். 30 வருடங்கள் கழிந்தன. கணவனின் அலமாரி திறந்து இருப்பதைக் கவனித்த மனைவி ஆர்வம் பொறுக்காமல், உள்ளே எட்டிப்பார்த்தாள். அங்கே 12 ஆயிரம் ரூபாய் பணமும், மூன்று மெழுகுவர்த்திகளும் இருந்தன.
‘மெழுகுவர்த்தி எதற்கு?’ என்று கேட்டாள் மனைவி.
‘நான் உனக்குத் துரோகம் செய்யும் ஒவ்வொரு முறையும் ஒரு மெழுகுவர்த்தி வாங்கிவைப்பது வழக்கம்’ என்றான் கணவன்.
30 வருடங்களில் மூன்றே முறைதான் தவறி இருக்கிறானா? மன்னிக்கத் தயாராக இருந்தாள் மனைவி.
‘இந்தப் பணம்?’ என்று கேட்டாள்.
‘அதுவா? 100 மெழுகுவர்த்தி சேர்ந்துவிட்டால், அதைப் பாதிவிலைக்கு கடைக்காரனிடமே கொடுத்துவிடுவேன். அப்படிச் சேர்ந்த காசு அது’ என்றான் கணவன்.
காதல் இன்றி, ‘மனைவி’ ‘கணவன்’ என்று வெறும் பெயரளவில் உறவுமுறை கொண்டு ஒருவருடன் வாழ்வது சித்ரவதையானது. நீங்கள் ஒருவருடன் நெருக்கமாக இணைந்து வாழ்வதில் உள்ள சுகம் காரணமாக, அவர்மீது வைத்திருக்கும் மதிப்பு காரணமாக, அன்பு காரணமாகச் சேர்ந்து இருப்பதில் அர்த்தம் உள்ளது. சமூகத்திற்காக மட்டுமே ஒரு நபருடன் நீங்கள் வாழ்க்கையைத் தொடர வேண்டியிருந்தால், அது நரகம்தான்.
ஒருவன் ரபியிடம் (சர்ச் ஃபாதர் போல்) வந்தான், ‘என் மனைவியை மிகவும் நேசிக்கிறேன். ஆனால், தெருவில் செல்கையில் மற்ற அழகான பெண்களைக் காண்கையில் அவர்களால் தூண்டப்படுகிறேன். தவிக்கும் மனதை என்ன செய்வது?’ என்று கேட்டான்.
ரபி சொன்னார், ‘அபார உணவு வகைகளைப் பார்த்துப் பசியை எங்கே வேண்டுமானாலும் வளர்த்துக்கொள். ஆனால், உணவுக்கு வீட்டுக்குப் போய்விடு’.

User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 More like this
யார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....!
ஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் !!
ஓம் நமசிவாய - சிவ துதி !!
அருணகிரிநாதரின் சிவ பாடல் !!
லிங்கம் சிவ லிங்கம் !!
திருமுருகன் பூண்டி கோவில் கும்பாபிஷேகம் !!
சிவ சரணம் துதி பாடல் !!
தென்கயிலாயம் வெள்ளியங்கிரியான்டவர் !!
திருநள்ளார் தெர்பாராண்யேஸ்வரர் கோயில் !!
திருவண்ணாமலை முக்தி தலம் !!