Home  |  அறுசுவை

பல பழ ஜாம்(Mixed fruit jam)

தேவையானவை :

 

பல கனிகள் சேர்ந்த பழக்கூழ் - ஒரு கிலோ

சர்க்கரை - ஒரு கிலோ

சிட்ரிக் ஆசிட் - ஒன்றேகால் டீஸ்பூன்

ராஸ்பெர்ரி ரெட் கலர் - தேவையான அளவு

மிக்ஸ்ட் புரூட் பிளேவர் எஸென்ஸ் - ஒரு டீஸ்பூன்

 

செய்முறை :

 

1. கனிந்த இனிப்புச் சுவையுள்ள பழங்களைத் தேர்ந்தெடுக்கவும் உதாரணமாக மாம்பழம், வாழைப்பழம், ஆப்பிள், பலாப்பழம் போன்ற பழங்களை வாங்கி தோல், கொட்டை நீக்கி விட்டு சிறு துண்டுகளாக்கி வேக வைத்து மசித்து பழக்கூழ் தயாரித்துக் கொள்ளவும்.

 

2. பழக்கூழ், சர்க்கரை இரண்டையும் சேர்த்து கொதிக்க விடவும், கையை உள்ளே விடாமல் கெட்டியாகும் வரை கிளறவும்.

 

3. இறக்கி வைப்பதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன் சிட்ரிக் ஆசிட், கலர், எஸென்ஸ் சேர்க்கவும்.

 

4. ஜாம் ரெடியானதும் சூடாக இருக்கும்போதே ஏற்கனவே சுத்தம் செய்யப்பட்ட வாயகன்ற பாட்டிலில் நிரப்பவும். பாட்டில் கெட்டியான பாட்டிலாக இருப்பது அவசியம்.

 

5. சூடாக ஊற்றுவதால் பாட்டில் உடைந்து விடாமல் இருக்க, பாட்டிலை ஒரு மரப்பலகையின் மீது வைத்து ஜாமை ஊற்ற வேண்டும்.

 

6. ஜாம் ஆறும் வரை பாட்டிலை திறந்து வைத்திருந்து, நன்கு ஆறியதும் மூடி விட்டால் ஜாம் ரெடி.

Mixed Fruit Jam

Ingredients for Mixed Fruit Jam :


Mixture of all Fruit Varieties - 1 kg,

Sugar - 1 kg,

Citric Acid - 1-1/2 tsp,

Raspberry Red Colour - as needed,

Mixed Fruit Flavor Essence - 1 tsp.


Method to make Mixed Fruit Jam :


1. Pick up the well fruited and well tasted fruits. Eg : Mango Fruit, Banana, Apple, Jack Fruit. Remove the seeds and peel it off well and make them into pieces and allow it boil for few minutes. And knead it well.

2. Take a vessel add the prepared fruit extract and then add sugar along with them and allow it boil. Stir it well until it gets thick consistency. 

3. When it gets thick consistency , finally add citric acid, colour and essence along with them. 

4. Take a well cleaned bottle. Drop the boiled fruit mixture in the bottle. The bottle must be strong and thick. It should not break when heat mixture inserted. 

5. Kepp the bottle opened. Allow this for some minutes until it gets cooled. 


Scrumptious Mixed Fruit Jam is ready. 














  06 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!