Home  |  திரை உலகம்

மெய்யழகி ( Meiyazhagi )

மெய்யழகி ( Meiyazhagi )

Movie Name: Meiyazhagi மெய்யழகி
Hero: BALAJI
Heroine: Jai Quehaeni
Year: 2013
Movie Director: T.Jayavel
Music By: Abheshek



தம்பியை ஈன்ற அம்மா மரணத்தைத் தழுவ, தாயின் இடத்தை நிரப்புகிறாள் அக்கா. ஆட்டிசம் குறைபாட்டுடன் வளரும் தம்பியைக் காப்பாற்ற வாழை இலைகளை உணவுவிடுதிகளுக்கு விற்றுத் தம்பியைக் காக்கும் நேர்மையான கிராமத்துப் பெண். திருமணம் செய்துகொண்டால், தம்பியைப் பார்த்துக் கொள்ள முடியாமல் போய்விடுமோ என அஞ்சி வாழும் இந்த அபலைப் பெண் மீது அந்த ஊரின் பெரிய மனுசனாக இருக்கும் பண்ணையாருக்குக் காதல். ஆனால் பண்ணையாரின் கார் ஒட்டுநராக இருக்கும் இளைஞனின் காதலை ஏற்றுக்கொள்கிறாள். ஆனால் தம்பியால் காதலனை இழக்கவேண்டிய சூழல் வரும்போது அக்காள் என்ன செய்தாள் என்பது மெய்யழகியின் வாழ்க்கை நிலை. மெய்யழகியை மணமுடிக்க, தனது மனைவியை வைத்தே காய் நகர்த்தும் பண்ணையாரும், கணவன் சொன்னால் அதில் உண்மை இருக்கும் என்று கண்மூடித்தனமாக நம்பும் அவரது மனைவி கதாபாத்திரமும் கதையை இழுத்துச் செல்வதில் கன கச்சிதம்.

’மெய்யழகியாக’ நடித்திருக்கும் ஆரோகணம் படப்புகழ் ஜெய்குஹானி அருமையான தேர்வு. துளி ஒப்பனை இல்லாமல் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். கணவனைத் திருமணம் செய்துகொண்டால் எல்லாமே கிடைக்கும் என்று சாப்பிட அழைக்கும் பண்ணையாரின் மனைவியிடம் “எச்சில் இலைல சாப்பிடக் கூப்பிடுறீங்களே... நியாயமாக்கா..?” என்று கேட்கும் கண்ணியம் கெடாமல் இருக்கிறது.ஆட்டிசம் தம்பியாக நடித்திருக்கும் பாலாஜி, 'பட்டாளம்', 'காதல் சொல்ல வந்தேன்' ஆகிய படங்களில் நடித்திருக்கும் இவர், வாயில் எச்சில் ஒழுகியபடியே கைகளை மடக்கி வைத்துக் கொண்டு.. கால்களைத் தரையில் தேய்த்தபடியே தனது கதாபாத்திரத்தை முழுமையாக உயிரூட்டியிருக்கிறார்.

அபிஷேக்கின் இசையில் அமைந்த மூன்று பாடல்களுமே கதையைத் தூக்கிப்பிடிக்கும் பாடல்கள். பொழுதுபோக்கை நாடிவரும் பெரும்பான்மை ரசிகர்களுக்கு, உணர்ச்சிபூர்வமான ஒரு கதையைச் சொன்னாலும், அதை விறுவிறுப்பாகச் சொல்ல முடியும் என்று திரைக்கதையிலும் தொய்வில்லாத தன்மையைக் கடைசிவரை கையாண்டிருக்கிறார் இயக்குனர். இந்தக்கதையில் நகைச்சுவையைத் தேவையில்லாமல் நுழைக்காமல் இருந்ததற்காகவே இயக்குனரைத் தனியாகப் பாராட்டலாம்.கதாபாத்திரங்களை மிகையில்லாமல் உருவாகியவிதம், காட்சிகளை நமக்கு அருகாமையில் நிகழ்வதுபோலச் சித்தரித்த விதம் சூப்பர்.மெய்யழகியை அனைவரும் பார்க்கத் தகுதியான படமாக்கியிருக்கிறது.

 

  18 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்