Home  |  கல்விச்சோலை

எம் பி பி எஸ் கட் ஆப் குறைவதால் சென்ற ஆண்டு மாணவர்களுக்கு சீட் கிடைக்கும் அதிர்ஷ்டம் !!

எம் பி பி எஸ் கட் ஆப் குறைவதால் சென்ற ஆண்டு மாணவர்களுக்கு சீட் கிடைக்கும் அதிர்ஷ்டம் !!

எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கு இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் உயிரியல், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் கட் ஆப் மதிப்பெண் நிர்ணயிக்கப்படுகிறது.


இந்த வருடம் பிளஸ் 2 உயிரியல், வேதியியல், இயற்பியல் ஆகிய பாடங்களில் 200 க்கு 200 மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தை காட்டிலும் குறைவாகும். இதனால் மருத்துவ கட் ஆப் மார்க் 0.5 அளவுக்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கடந்த வருடம் உயிரியல், இயற்பியல், வேதியியல் ஆகிய மூன்று பாடங்களிலும் 200 க்கு 200 கட் ஆப் மதிப்பெண் 132 மாணவர்கள் எடுத்து இருந்தனர். ஆனால், இந்த ஆண்டு 200 க்கு 200 மதிப்பெண் சில பேர் மட்டுமே பெற்றுள்ளனர்.


மேலும் 200 க்கு 199.75 கட் ஆப் மதிப்பெண்ணில் தொடங்கி 199 வரை கட் ஆப் மதிப்பெண் போட்டி குறைவாக இருக்கும். 200 க்கு 199 க்கு கீழே 198.75 முதல் 197.75 வரை வழக்கமான கட் ஆப் மதிப்பெண் பெற்றவர்கள் இடையே கடுமையான போட்டி ஏற்படும்.


இந்த ஆண்டு 197.5 கட் ஆப் மதிப்பெண் எடுத்துள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு அரசு மருத்துவ கல்லூரிகளிலும் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர முடியுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும் சென்ற ஆண்டு வெய்டிங் லிஸ்டில் உள்ள மாணவர்கள் இந்த வருடம் சீட் கிடைக்க வாய்புகள் பிரகாசமாக உள்ளது,எனவே சென்ற ஆண்டு மாணவர்கள் இந்த ஆண்டு mbbs சீட்டுக்கு விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்க படுகிறது.

 

Mbbs seat for old students
  14 Nov 2016
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
TNPSC SELECTION இணையதளத்தில் பார்க்கலாம் !!
மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி உதவித் தொகை !!
மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் புதிய திருப்பம் !!
ஆசிரியர் தகுதி தேர்வு - 2015
எம் பி பி எஸ் கட் ஆப் குறைவதால் சென்ற ஆண்டு மாணவர்களுக்கு சீட் கிடைக்கும் அதிர்ஷ்டம் !!
+2 தேர்வு முடிவுகள் !!
நாளை பிளஸ் டூ ரிசல்ட் !!
மெடிக்கல் சீட் - விண்ணப்பம் விற்பனை தொடங்கியது !!
வெளிநாடு செல்லும் மாணவர்களே உசார் !!
10 மற்றும் +2 ரிசல்ட் தேதி அறிவிப்பு !!