Home  |  கல்விச்சோலை

மெடிக்கல் சீட் - விண்ணப்பம் விற்பனை தொடங்கியது !!

மெடிக்கல் சீட் - விண்ணப்பம் விற்பனை தொடங்கியது !!


மருத்துவ மாணவர்கள் சேர்கை ஆரம்பித்துவிட்டது மருத்துவ படிப்பில் சேர மே 11-ந்தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அரசு மருத்துவ கல்லூரிகளில் 2,555 இடங்கள் உள்ளன மருத்துவ படிப்பில் சேருவதற்கான விண்ணப்பம் மே 11-ந்தேதி முதல் வழங்கப்படுகிறது.


அரசு மருத்துவக்கல்லூரிகளில் மொத்தம் 2,555 இடங்கள் உள்ளன என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.மருத்துவ படிப்பு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வை 8 லட்சத்து 86 ஆயிரத்து 27 மாணவ-மாணவிகள் எழுதினார்கள். இந்த தேர்வு முடிவு மே 7-ந்தேதி வெளியிடப்பட உள்ளது.


நமது தமிழ்நாட்டில் மொத்தம் சென்னை மருத்துவக்கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி, அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி உள்பட 19 அரசு மருத்துவக்கல்லூரிகள் உள்ளன.இந்த கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். சேருவதற்கு 2,555 இடங்கள் உள்ளன.


அவற்றில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் 15 சதவீதம், அதாவது 383 இடங்கள் ஆகும். இந்த இடங்கள் போக மீதமுள்ள 2,172 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேரலாம்.ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரிதனியார் மருத்துவக்கல்லூரிகள் 12 உள்ளன.

 


மருத்துவக்கல்வி தேர்வுத்துறை செயலாளர் டாக்டர் சுகுமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-மே 11-ந்தேதி முதல் விண்ணப்பம்எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு விண்ணப்பம் வழங்குவது குறித்து மே 10-ந்தேதி அறிவிப்பு வெளியாகிறது. அதன்பின்னர்,

 

விண்ணப்பம் மே 11-ந்தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகளிலும் வழங்கப்படும்.பல் மருத்துவப்படிப்புக்கான விண்ணப்பம் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக்கல்லூரியில் வழங்கப்படும். விண்ணப்பம் மே 28-ந்தேதி வரை வழங்கப்பட உள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை சமர்ப்பிக்க மே 29-ந்தேதி (மாலை 5 மணி வரை) கடைசி நாள் ஆகும்.

 

விண்ணப்ப படிவங்கள் கடந்த ஆண்டை போலவே இந்தஆண்டும் ரூ.500-க்கு விற்கப்படும். ஆனால் ஆதிதிராவிடர், பழங்குடி இன மாணவர்களுக்கு அவர்கள் சாதி சான்றிதழுக்கான ஜெராக்ஸ் கொடுத்து விண்ணப்பத்தை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

 

தரவரிசை பட்டியல்கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதல் மாணவ-மாணவிகள் விண்ணப்பிப்பார்கள் என்று தெரிகிறது. பிளஸ்-2 தேர்வு முடிவு 7-ந்தேதி வெளியானாலும், விடைத்தாள் மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிந்த பிறகு இறுதி மதிப்பெண் பட்டியலை அரசு தேர்வுத்துறை சி.டி. வடிவில் எங்களிடம் ஒப்படைக்கும்.அதன்பின்னர் தான் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.

 


ஜூன் 12-ந்தேதி தரவரிசைப்பட்டியல் வெளியிட உத்தேசமாக முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு டாக்டர் சுகுமார் அவர்கள் கூறினார்.

  23 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
TNPSC SELECTION இணையதளத்தில் பார்க்கலாம் !!
மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி உதவித் தொகை !!
மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் புதிய திருப்பம் !!
ஆசிரியர் தகுதி தேர்வு - 2015
எம் பி பி எஸ் கட் ஆப் குறைவதால் சென்ற ஆண்டு மாணவர்களுக்கு சீட் கிடைக்கும் அதிர்ஷ்டம் !!
+2 தேர்வு முடிவுகள் !!
நாளை பிளஸ் டூ ரிசல்ட் !!
மெடிக்கல் சீட் - விண்ணப்பம் விற்பனை தொடங்கியது !!
வெளிநாடு செல்லும் மாணவர்களே உசார் !!
10 மற்றும் +2 ரிசல்ட் தேதி அறிவிப்பு !!