Home  |  திரை உலகம்

மயில்சாமி நல்லா காமெடி மட்டுமல்ல நல்லா சமையலும் பண்ணுவார் !!

எல்லோருக்கும் மயில்சாமியை ஒரு நடிகராக தான் தெரியும், ஆனால் அவர் ஒரு நல்ல சமையல்காரரும் கூட. 


எல்லோரிடமும் நன்றாக பேசிப் பழகும் மயில்சாமிக்கு தமிழ் மொழியை தவிர வேறு எந்த மொழியும் தெரியாது. அதனால் தான் என்னவோ, வெளிநாடுகளுக்கு படப்பிடிப்புக்கு செல்ல வேண்டும் என்றாலே அவருக்கு பயம் வந்து விடுகிறது. 


இந்நிலையில், தற்போது வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் யாமிருக்க பயமே என்ற படத்தில் ஒரு காமெடி வேடத்தில் நடித்திருக்கும் அவர், அந்த படத்துக்காக டில்லியில் இருந்து 3 மணி நேரம் காரில் படப்பிடிப்பு நடந்து ஸ்பாட்டுக்கு சென்றாராம்., அங்கே சென்று பார்த்தால், பல நாட்களாக சாப்பிடாதவர்கள்போல் யூனிட் நபர்கள் காணப்பட்டார்களாம். 


காய்ந்த சப்பாத்திகளையே பல நாட்களாக அவர்கள் சாப்பிட்டு வருகிற சேதியறிந்த மயில்சாமி, உடனே மொத்த யூனிட்டுக்கும் சமைக்கும் வேலைகளில் களம் இறங்கி விட்டாராம். தனது கைப்பக்குவத்தில் தான் அந்த படப்பிடிப்பில் இருந்த 5 நாட்களும் அவர்களுக்கு வகை வகையாக சமைத்து போட்டாராம். 


அது மட்டுமின்றி, தான் நடிக்கும் எந்த படத்தின் யூனிட் அவுட்டோர்களில் மலைப்பிரதேசம் மற்றும் காட்டுப்பகுதியில் முகாமிட்டிருந்தாலும், இப்படித்தான் அவர்களுக்கு சரியான உணவுகள் கிடைக்காது என்பதால், தானே சமைத்துக்கொடுக்கத் தொடங்கி விடுவாராம். அதனால் யூனிட்டில் உள்ளவர்கள் மயில்சாமியை அன்போடு அப்பா என்றுதான் அழைப்பார்களாம்.  

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்