Home  |  ஆன்மிகம்

மாசி விழா - துவக்கம் - திருச்செந்தூர்

மாசி விழா - துவக்கம் - திருச்செந்தூர்

முருகப்ப்பெருமான் மாசி விழா கொண்டாட்டம்.

திருச்செந்தூர் : அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி மார்ச் 6ம் தேதி வரை நடக்கிறது.

 


விஸ்வரூப தீபாராதனை இன்று அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு 1.30 மணிக்கும் , 2 மணிக்கு அபிஷேகம், 2.30 மணிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனை நடந்தது.

 


முக்கிய வீதிகள் வழியாக காலை 3.50 மணிக்கு கொடி பட்டம் பல்லக்கில் வலம் வந்து 4.30 மணிக்கு கோயில் கொடி மரத்திற்கு வந்தடைந்தது.

அங்கு சிறப்பு பூஜையை தொடர்ந்து 5.35 மணிக்கு

 

 

பூவலிங்கபட்டர் கொடியேற்றினார். தொடர்ந்து கொடிமரத்திற்கு பல வகையான அபிஷேகம், அலங்காரத்தை தொடர்ந்து 6.45 மணிக்கு மகாதீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 

தங்க சப்பரத்தில் அப்பர் சுவாமிகள் இன்று மாலை 4.30 மணிக்கு எழுந்தருளி திருவீதிகளில் உழவாரப்பணி செய்து கோயில் சேர்தல்,

 

இரவு 7 மணிக்கு ஸ்ரீ பெலிநாயகர் அஸ்திரத்தேவருடன் தந்தப்பல்லாக்கில் கோயிலிருந்து புறப்பட்டு ஒன்பது சந்திகளிலும் உலா வந்து திருக்கோயில் சேர்தல்.

 

முக்கிய திருவிழாவான மார்ச் 1ம் தேதி -
7ம் நாள் அதிகாலை 4.30 மணிக்கு மேல் திருக்கோயிலில் சண்முகப்பெருமான் உருகு சட்டசேவையும் காலை 8.45 மணிக்கு சுவாமி ஆறுமுகநயினார் சண்முக விலாசத்திலிருந்து வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்தருளி மண்டகப்படி சேருகிறார்.

 

அங்கு அருள்மிகு திருச்செந்தூர் சுவாமிக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்ததும்,
தங்கச்சப்பரத்தில் மாலை 4 மணிக்கு சிவப்புசாத்தியில் எழுந்தருளுகின்றார்.

 

2ம் தேதி - அதிகாலை 5 மணிக்கு சுவாமி ஆறுமுகநயினார் பெரிய வெள்ளி சப்பரத்திலும், பகல் 12 மணிக்கு பச்சை சாத்தி சப்பரத்தில் எழுந்தருளுகிறார்.

 

4ம் தேதி - தேரோட்டம் காலையில் நடக்கிறது. காலை 6.30 மணிக்கு முதலில் விநாயகர், சுவாமி, அம்மாள் தேர்கள் இழுக்கப்படுகின்றன.

 

5ம் தேதி - தெப்ப உற்சவம் இரவு நடக்கிறது.

 

6ம் தேதி - மஞ்சள் நீராட்டு மாலை 4.30 மணிக்கு நடக்கிறது. சுவாமி, அம்மன் மலர்கேடய சப்பரத்தில் இரவு 9 மணிக்கு எழுந்தளுகிறார்..

 

விழா இனிதே நடக்க பொதுமக்கள் வழிபட தெய்வ அருள் பொழியட்டும்.....

  23 Feb 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
யார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....!
ஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் !!
ஓம் நமசிவாய - சிவ துதி !!
அருணகிரிநாதரின் சிவ பாடல் !!
லிங்கம் சிவ லிங்கம் !!
திருமுருகன் பூண்டி கோவில் கும்பாபிஷேகம் !!
சிவ சரணம் துதி பாடல் !!
தென்கயிலாயம் வெள்ளியங்கிரியான்டவர் !!
திருநள்ளார் தெர்பாராண்யேஸ்வரர் கோயில் !!
திருவண்ணாமலை முக்தி தலம் !!