Home  |  அறுசுவை

இன்றைய ஸ்பெஷல் மசாலா கோழிக்கறி !!

இன்றைய ஸ்பெஷல் மசாலா கோழிக்கறி !!

ருசியாக சமைக்க தேவையான பொருட்கள் -

கோழி கறி - அரை கிலோ
வெங்காயம் - 4 போதும்


இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி


மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி


மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு


சீரகம் - ஒரு தேக்கரண்டி
பிரியாணி இலை - ஒன்று


முதலில் ஊற வைக்க வேண்டியவை


தயிர் - அரை கப்


வெங்காயம் - ஒன்று
பச்சைமிளகாய் - 2


இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு .


வெங்காயம், பச்சைமிளகாயை நைய அரைத்துக் கொள்ளவும்.
கோழி கறியில் தயிர், இஞ்சி பூண்டு விழுது, வெங்காய கலவை மற்றும் உப்பு சேர்த்து 30 நிமிடம் ஊற வைக்கவும்.


குக்கரில் எண்ணெய் ஊற்றி சீரகம், பிரியாணி இலை போட்டு பொரித்து, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை நன்கு வதக்கவும்.


வெங்காயம் நன்கு வதங்கியதும் மற்ற தூள் வகைகளை சேர்த்து வதக்கவும்.
அதன் பிற்கு ஊற வைத்த கோழி கறியை சேர்த்து வதக்கவும். அவசியபடின் உப்பு சேர்த்துக் கொள்ளவும்.


கோழிக்கறி கலவையில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வேக விடவும்.
கறி வெந்ததும், அடுப்பிலிருந்து இறக்கும் முன் மிளகுத் தூள், கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி இறக்கவும்.


மணமணக்கும் கோழிக்கறி தயார் , இதே போல் செய்ங்க ஜாலியா சாப்பிடுங்க .

  28 Mar 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!